புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 08, 2025)

கிருபையும் விசுவாசமும்

எபிரெயர் 11:6

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம் கூடாதே.


'எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.' (லூக்கா 12:48) என்று ஆண்ட வராகிய இயேசு கூறியிருக்கின்றார். கிருபையின் நாட்களிலே வாழும் அருமையான சகோதர சகோதரிகளே, நீங்கள் கிருபையைக் குறித்து, அதிகமாய் மேன்மைபாராட்டுகின்றவர்களாக இருந்தால், அதை வீணடிக்காதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்க ளாக இருங்கள். கிருபையானது பாவம் செய்தற்கென்று கொடுக்கப்ப ட்ட அனுமதி சீட்டு அல்ல. மாறாக, மாம்சமானது செய்ய விரும்பும் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்யாமல் இருக்கவும், சுயபெலத்தினாலே, நம் வாழ்விலே நிறைவேற்றி முடிக்க இயலாதிருக்கும் தேவனுக்கு பிரியமான காரியங்களை நிறைவேற்றி முடிக்கும்படியாகவுமே கிருபை நமக்கு தாராளமாக அளிக்கப்பட்டிருக்கின்றது. (2 கொரி 12:9). அன்று ஏதேனிலே, ஏவாளுக்கு, எப்படிப்பட்ட சுயாதீனம் கொடுக்கப்பட்டிருந்ததோ, இன்று ஒவ்வொரு காரியங்களிலும், நமக்கு அந்த சுயாதீனம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு சம்பவங்கிளிலும் தெரிவானது, அவனவனுடையதாக இருக்கின்றது. மீட்பராகிய இயேசு வந்த பின்பு மாத்திரமல்ல, தேவனாகிய கர்த்தர்தாமே, 'உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டறார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கி றார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.' (சங் 103:8-11). நாம் இந்த உலகத்தை ஜெயிக்கும்படிக்கும், தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக வாழும்படிக்கும், கிருபையினாலே நாம் பெற்ற விசுவாசித்திலே நிலைத்திருக்க வேண்டும் (எபே 2:8, 1 யோவான் 5:4). விசுவாசதின் நல்ல போராட்டத்தை போராட வேண்டும். விசுவாசத்திலே ஆரம்பித்து, சுயபெலத்திலே முடிவடைந்தவர்கள் தவறிப் போகின்றார்கள். விசுவாசத்தினாலே இரட்சிக்கப்பட்ட நாம், விசுவாசத்திற்குரிய கிரியைகளை நம் வாழ்விலே நடப்பிக்க வேண்டும். விசுவாசமில்லாமல் ஒருவனும் தேவனுக்கு பிரியமாக இருக்க முடியாது.

ஜெபம்:

என்னுடைய பாவங்களுக்குத்தக்கதாக செய்யாமல் கிருபையை பொழிகின்ற தேவனே, கிருபையின் ஆண்டுகளை ஞானமாய் பயன்படுத்தும்படிக்கு உணர்வள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:15-17