புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 07, 2025)

தேவனுடைய ராஜ்யத்திற்குரியவர்கள்

1 கொரிந்தியர் 6:11

ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்ப ட்டீர்கள், பரிசுத்தமாக்கப்ப ட்டீர்கள்,


'தேவனாகிய கர்த்தரை அன்றி வேறு தேவர்கள் உனக்கு உண்டாயிருக்கவேண்டாம். சொரூப, விக்கிரக ஆராதனை உனக்கு வேண்டாம், கர்த்தருடைய நாட்களை பரிசுத்தத்தோடு அனுசரித்தல், தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுதல், கொலை, விபசாரம், களவு செய்யாதிருத்தல், பொய் சொல்லாதிருத்தல், பிறக்குரிய உடைமையை யும், தாரத்தையும் இச்சியாதிருத்தல்' (யாத்திராகமம் 20:1-17) போன்ற தேவனாகிய கர்த்தரால் கூறப்பட்ட பரிசுத்தத்திற்குரிய கட்டளைகளை நாம் எந்தக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்க ளாக இருக்க வேண்டும்? இது கிருபையின் காலம் எனவே, இவை அவசியமில்லை என்று ஒரு விசுவாசி கூற முடியுமா? அருமையான விசுவாசத்தைப் பெற்ற தேவ பிள்ளைகளே, சற்ற தரித்திருந்து சிந்தித்துப் பாருங்கள். இந்த பத்துக் கட்டளைகளை நியாயப்பிரமாணத்தோடு முடிவடைந்து விட்டது என்று விட்டுவிட முடியுமோ? ஆண்டவராகிய இயேசுதாமே இவைகளை இன்னும் ஆழமாக விபரித்துக் கூறியிருக்கின்றார். பரிசுத்த ஆவியின் உந்துதலினாலே, வேத வார்த்தைகளை எழுதி வைத்தவர்கள், இன்னும் அதிக விளக்கங்களை கூறியிருக்கின்றார்கள். எனவே காரியத்தின் கருப்பொருளின்மேல் நோக்கமாயிருங்கள். ஆண்டவராகிய இயேசுதாமே, தேவத்துவத்தின் பரிசுத்த்திற்குரிய ஒழுக்க நெறி களை குறித்து விளக்கிக் கூறியிருக்கின்றார். மேலும், அவராலே அழைக்கப்பட்டவர்கள், பரிசுத்த ஆவியினாலே உந்தப்பட்டு, பரிசுத்தத்தைக் குறித்த இன்னும் அதிகமாக விளகிக் கூறியிருக்கின்றார்கள். 'அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர் கள்.' (1 கொரி 6:9-11).

ஜெபம்:

முடிவு பரியந்தம் என்னோடிருந்து என்னை நடத்தும் தேவனே, என்னுடைய அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் இன்னதென்று அறிந்து, அதை என் வாழ்விலே நிறைவேற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளி 22:15