புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 06, 2025)

பரிசுத்தமாகுதல் எந்த காலத்திற்குரியது?

2 கொரிந்தியர் 7:1

பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.


'உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.' (லேவி 19:1) என்று தேவனாகிய கர்த்தர்தாமே, சபை அனைத்திற்கும், மோசே வழியாக செய்தி அனுப்பினார். இந்த சம்பவமானது நியாயப்பிரமாணத்தின் காலத்திலே இடம் பெற்றது. அதனால், தேவனாகிய கர்த்தருடைய பரிசுத்தம் புதிய ஏற்பாட்டின் காலத்திலே மாற்றமடைந்து விட்டதா? ஒரு போதும் இல்லை. அவர் இருக் கின்றவராக இருக்கின்றார். அவர் நேற் றும் இன்றும் என்றும் மாறாதவர். இதைக் குறித்து, ஆண்டவராகிய இயேசுவின் பிரதான அப்போஸ்தல ராகிய பேதுரு, மீண்டும் வலியுறுத்தி, விளக்கிக் கூறியதாவது: 'நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழை த்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெ ல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. (1 பேதுரு 1:14-16) என்றார். இது புதிய ஏற்பாட்டின் நாட்கள். பரிசுத்தத்திற்கென்று வேறுபிரிக்கப்பட்ட அருமையான சகோதர சகோதரிகளே, தேவனாகிய கர்த்தர்தாமே அன்றும், இன்றும், என்றும் பரிசுத்தராகவே இருக்கின்றார். அந்தப் பரிசுதமானது, நியாயப்பிரமாண காலத்திலோ, கிருபையின் காலத்திலே மாறிப் போவதில்லை. அதிகம் பெற்றுக் கொண்டவன், அதிகமானதைக் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும். எனவே, அதிக கிருபையை பெற்ற நாம், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் நாட்கள் என்று தர்க்கித்துக் கொள்ளாமல், 'இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமா குதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.' (2 கொரி 7:1). தேவனுக்கேற்ற பரிசுத்தராக இருப்பது, நியாயப்பிரமாண காலத்திலும், கிருபையின் நாட்களிலும், மனித பெலத்தினால் நிறைவேற்ற முடியாது. நீங்கள் பாவமில்லாத, பூரண பரிசுத்தராக இருங்கள் என்று கூறாமல், பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம் என்று கூறப்பட்டிருக்கின்றது. முதலாவதாக நாம் அந்த சிந்தையை தரித்தவர் ளாக காணப்படுவோம். அப்போது, தேவ ஆவியானவர் கற்றுத்தந்து, தம் வழியிலே நம்மை நடத்திச் செல்வார்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழ என்னை வேறு பிரித்த தேவனே, இந்த பாவமான உலகிலே, நான் பரிசுத்தமடையும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து உம் வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:16