புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 05, 2025)

தேவ ஆவியினாலே ஆகும்

சகரியா 4:6

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


நம்முடைய நாளாந்த வாழ்க்கையிலே, அதிகாரங்களுக்கும், ஆளுகைக்கும் கீழ்படிய கடமைப்பட்டிருக்கின்றோம். அதன்பொருட்டு, ஒரு விசுவாசியானவன், தனக்குண்டான வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் சமூக உரிமையுடையவனாக இருக்கின்றான். ஆனால், ஆண் டவராகிய இயேசு இவற்றை குறித்து மேலான காரியங்களை கூறியிரு க்கின்றார். 'உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவ ர்களைச் சிநேகிக்கிறார்களே.' நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது கடினமாக இருந்தால், ஒருவன் தன் சத்துருவை மன்னிப்பது மாத்திரம் அல்ல அவனை சிநேகிப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்? 'உங்க ளில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத் தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி? இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வெட்கம் உண்டாகு ம்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா? சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான். நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப் படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?' (1 கொரி 6:1-7). நம்மாலே ஆகாத காரியங்களை, செய்து முடிக்கும்படி தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியா னவர் எப்போதும் ஆயத்துமுள்ளவராகவே இருக்கின்றார். நீங்கள் ஆயத்தமா?

ஜெபம்:

திவ்விய சுபாவத்திற்கு பங்காளிகளாக இருக்க என்னை அழைத்த தேவனே, நான் உம்முடைய அழைப்பின் பிரதானமான நோக்கத்தை அறிந்தவனாக உம் திருவார்த்தைகளின்படி நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 6:27-35

Category Tags: