புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 02, 2025)

கற்பனையின் பொருள்

1 தீமோத்தேயு 1:5

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.


தேவனாகிய கர்த்தருடைய அநாதி தீர்மானத்தையும், பரிசுத்த வேதாக தத்தில் கூறப்பட்டவைகளில் நடந்தேறிய சம்பவங்களின் கருப்பொரு ளையும், இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களையும், இனி மேல் நடக்கவிருக்கும் சம்பங்க ளையும், ஒரு விசுவாசியானவன் முறைப்படி அறிந்து கொள்ள வே ண்டும் என்றால், பரிசுத்த வேதா கமத்தை ஆரம்பத்திலிருந்து, முடி வுவரை ஒரு முழமையான ஜீவ புத்தமாக, குறிப்பிடப்பட்ட நிகழ் வுகளை காலவரிசைப்படிபட்டி யல்படுத்தி, அறிந்து கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, கிறிஸ்தவமானது இர ண்டாயிரம் வருடத் திற்கு முன்தாக ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மதம் என்று சிலர் கூறிக் கொள் கின்றார்கள். உலக தோற்றமுதல் முன்குறிக்கப்பட்ட மீட்பராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து சுமார் இரண் டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது உண்மை. ஆனால், உலகம் எப்போது, எங்கே ஆரம்பித்தது? கிறிஸ்துpவன் முதலாவது வருகை எப்போது முன்குறிக்க ப்பட்டது? அவர் ஏன் பரலோகத்தைவிட்டு தம்மை தாழ்த்தி பூவுலகத் திற்கு வரவேண்டும்? அவர் யாருக்காக இந்த பூவுலகிற்கு வந்தார்? அவருடைய பிறப்பு, பரிசுத்த வாழ்வு, தம்மைப் பலியாக ஒப்புக் கொடு த்தல், உயிர்தெழுதல், பரமேறுதல், பரிசுத்த ஆவியை உலகத்திற்கு அனுப்பி வைத்தல், இவைகளை குறித்து முன்னறிவிப்பை கூறியவர்கள் யார்? கடைசி காலம் என்றால் என்ன? அவருடைய இரண்டாம் வருகை என்றால் என்ன? உலக முடிவும் நியாயத்தீர்பும் எப்போது நடைபெறும்? ஏன்பவற்றை முறையாக கற்றுக் கொள்ள விரும்புகின்வர்கள், ஆதியாக த்திலிருந்து, வெளிப்பத்தல் வரை அறுபத்தாறு (66) புத்தகங்களையும். காலக்கோட்டின்படி கற்றுக் கொள்ள வேண்டும். எனவே, அது பழைய ஏற்பாடு, இது புதிய ஏற்பாடு என்ற தர்கங்களை விட்டுவிட்டு, தேவனு டைய அநாதி தீர்மானத்தை அறிந்து கொள்ளும்படிக்கு, உங்களை தேவனாகிய கர்த்தர் முன்னிலையிலே தாழ்த்துங்கள். 'கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. இவைகளைச் சிலர் நோக் காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.' (1 தீமோ 1:5-6). தேவ ஆவியானவர் உங்களுக்குள்ளே வாசம் பண்ணுகி ன்றார். உங்கள் நல்மனசாட்சியானது, பாவம் என்னதென்பதையும், பரிசுத்தம் இன்னதென்பதையும் உங்களுக்கு வகையறுத்துக் கூறும்.

ஜெபம்:

அழியாத ராஜ்யத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைகக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தீத்து 3:9-10