புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 01, 2025)

நம்முடைய அழைப்பு மேன்மையானது

2 தீமோத்தேயு 2:23

புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.


நியாயப்பிரமாணத்திலுள்ள கட்டளைகளை, 1. பண்டிகைகள் குறித்த ஒழுங்கு முறைகள், 2. சமூக உரிமையியல்களைக் கொண்ட நீதித்துறை, 3. தேவத்துவத்தின் தன்மைகள் அடங்கிய ஒழுக்க நெறிகளும், கட்டளைக ளும் என்று மூன்று பெரும் பகு தியாக பிரித்து, அவற்றைக் குறி த்து ஆராய்ந்து அறிந்து கொள்கி ன்றார்கள். கர்த்தருடைய வேதத் தை தொகுத்து வகுத்து கற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால், அப்படியாக கற்பதினால், ஒரு விசுவாசியானவன், தேவனு டைய அநாதி தீர்மானத்தைவிட்டு விலகி, விதண்டாவ தங்களிலும், கொள்கை கோட்பாடுகளின் தர்க்கங்க ளிலும் தன்னை சிக்க வைத்துக் கொள்வானானல், அதனால் அவனுக்கு உண்டாகும் பயனானது, உலக கல்வியினால் மனிதர்களுக்கு உண்டா கும் பலனுக்கு ஒத்ததாக இருக்கும். அதாவது, அப்படிப்பட்டவன், தன் பெயருக்கு பின்பாக, அநேக ஆங்கில எழுத்துக்களை சேர்த்துக் கொள் வதே அவனுக்கு உண்டான மேன்மையாக இருக்கும். நித்திய ஜீவ னுக்கென்று அழைக்கப்பட்ட அருமையான விசுவாசிகளே, நம்முடைய விசுவாச வாழ்க்கையில் நம்முடைய எண்ணமும், நோக்கமும், தாழ்மை, கீழ்படிவு, மனந்திரும் புதல், பரிசுத்த வாழ்வு, மறுரூபமாகுதல், கர்த்த ருடைய நாளுக்காக ஆயத்தப் படுத்துதல் போன்றவற்றை குறித்ததாக இருக்க வேண்டும். ஆனால், இன்று சிலர், நியாயப்பிரமாணமும் கிரு பையும் என்ற தலைப்பின் கீழே அநேக விவாதங்களை செய்து, தங் கள் மீறுதல்களுக்கு பரிகாரத்தை நாடாமல், வேத வார்த்தைகளினால் எப்படி தங்கள் பாவ வாழ்க்கையை நியாயப்படுத்துவதற்காக வேத த்தை கற்றுக் கொள்வதில் தங்கள் வாழ்நாட்களை விரயப்படுத்தி வருகின்றார்கள். ஆதி அப்போஸ்தல சபைகளின் நாட்களிலும், நியாயப்பிர மாணத்தையும், கிருபையையும் குறித்த குழப்பம் ஏற்பட்டிருந்தது. நாம் தேவனை சார்ந்து அவருடைய சித்தத்தை நம்முடைய வாழ்விலே நிறைவேற்றும் பொருட்டே, நியாப்பிரமாணத்தையும், கிருபையையும் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். மாறாக அவை ஒருபோதும் விதண்டாவாதங்களுக்கும், தர்க்கங்களுக்கும் உரியதாக இருக்கக்கூடாது. நியாயப்பிரமாணங்களை அதிகமா பேசிக் கொண்டு, தன்னை நீதிமான் என்று எண்ணுகின்றவர்களையும், கிருபை என்று பேசிக் கொண்டு, முன்பு செய்த பாவங்களை திரும்பவும் செய்து கொண்டு வாழ்பவர் களையும் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, அழைப்பின் நோக்கத்தை மறந்து, பிரயோஜனமற்ற காரியங்களிலே என் நாட்களை விரயப்படுத்தாதபடிக்கு, சுத்த மனசாட்சியோடு உமக்கு உண்மையுள்ளவனாக இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:1-2