தியானம் (மாசி 28, 2025)
நியாயப்பிரமாணத்தின் உபயோகம்
கலாத்தியர் 3:24
நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
ஆதியிலிருந்து, அந்தம் வரை இரட்சிபானது விசுவாசத்தினால் வருகின்றது. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் நீதிமாகுவதில்லை. அப்படியானால், அந்த நியாயப்பிரமாணம் பிரயோஜனம் என்ன? நிறைவேற்ற முடியாததை மனிதர்களுக்கு கொடுப்பதினால் அதனால் உண்டாகும் பலன் என்ன? நல் வழியிலே வாழ விரும்பும் மனிதர்களில் சிலர் தங்களை ஒடுக்கி பல நற்செயல்களை செய்கின்றார்கள். தங்கள் வாழ்விலே மீறுதல்கள் உண்டாகும் போது, அவை களை நிவர்த்தி செய்யும் பொருட்டு பலவிதான பரிகாரங்களை செய்தும், குற்ற உணர்வு அவர்களை பின்தொடர்வதால், மனதிருப்தியில்லாமல் வாழ்கின்றார்கள். விடுதலையடைய வழி இல்லையோ என தவிக்கின் றார்கள். இவ்விதமாக நியாயப்பிரமா ணமானது, ஆதாம், ஏவாளின், பூர்வீக பாவத்தன் விளைவினால், மனித குலத்திற்கு ஏற்பட்ட, நிவர்த்தி செய்ய முடியாத மனித சுபாவத்தின் உள்ளார்ந்த சீர்கேட்டைப் பற்றிய உணர்வையும், மனிதர்களின் ஆவிக் குரிய ஏழ்மை நிலையையும், தங்களை மீட்டு இரட்சிக்கக்கூடிய ஒரு இரட்சகர் தேவை என்ற உணர்வையும் கொடுத்து, உலகத்தை மீட்க வந்த இரட்சகராகி இயேசு வினிடத்திற்கு வழிநடத்துகின்றது. 'இரட்சராகிய இயேசுதாமே, தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மை த்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.' பிதாவின் சித்தத்தை சம்பூரணமாக நிறைவேற்றினார். முதலாவதாக, அவர் ஒருவரே நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்ட எல்லா காரியங்களையும் தம்முடைய வாழ்விலே கடைப்பிடித்து முற்றாக நிறைவேற்றினார். நிறைவேற்றி முடித்தார் என்பதினால், நியாயப்பிரமாணத்திலுள்ள யாவற்றையும் அவர் அழித்துப் போட்டார் என்பது பொருளல்ல. 'என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.' என்று பத்துக் கட்டளைகளிலே கூறப்பட்டிருக்கின்றது. அதை அவர் எப்படி அழித்துப் போட முடியும்? தேவத்துவத்தின் தெய்வீக தன்மைகள் ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஆனால் நாம் விசு வாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
ஜெபம்:
இரட்சிப்பின் தேவனே, நான் எப்போதும் ஆவியிலே எளிமையு ள்ளவனாக இருந்து, உம்முடைய அழியாத வார்த்தைகளிலே நிலை த்திருக்க எனக்கு உணர்வுள்ள இருயதத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - உபா 30:1-5