புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 27, 2025)

தேவனால் எல்லாம் கூடும்

பிலிப்பியர் 4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு


'நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டேன்.' (அப் 22:3). 'நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப் பிரமாணத்தின்படி பரிசேயன்; பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன் பப்ப டுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்கு ரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.' என்று தேவ ஊழியராகிய பவுல், கிறிஸ்துவை அறிவதற்கு முன்னதாக இருந்த தன்னுடைய வாழ்க்கையைக் குறித்து கூறியிருக்கின்றார். அதாவாது, மோசே ஊடாக கொடுக்கப்பட்ட சட்டதிட்டங்களின்படி, அவரிடத்தில் ஒருவரும் குற்றம் கண்டு பிடிக்க கூடாதிருந்தது. மனிதர்களால் வரும் புகழ்சியினால் ஒருவன் தேவனை பிரியப்படுத்தக் கூடுமோ? இல்லை. தேவனுடைய ஒளியானது, பவுலின் மேலே பிரசாசித்த போது, அவர் தன்னிடத்திலிருக்கும் இருளை உணர்ந்து கொண்டார். கர்த்தரை அறியாமல், அவரை துன்ப ப்படுத்தி வருகின்ற மனுஷன் எப்படி கர்த்தரை பிரியப்படுத்த முடியும்? கர்த்தரை இன்னார் என்று அறியாமல் எப்படி அவரை முழு மனதோடு தொழுது கொள்ள முடியும்? தேவ ஊழியராக பவுல், அவருடைய முன்னைய வாழ்விலே, கர்த்தரை இன்னார் என்று அறியாதிருந்தார். தேவனாகிய கர்த்ரை பிரியப்படுத்துகின்றேன் என்று எண்ண, தன் கிரியை களால், அவரை துன்பப்படுத்தி வந்தார். பின்பு, அவருடைய கண்கள் திறக்கப்பட்ட போது, தன் உண்மை நிலையை அறிந்து கொண்டார். தன் வாழ்வு எவ்வளவு நிர்பந்தமுள்ளதென்பதை உணர்ந்து கொண்டார். 'பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது. அவ ர்க ளில் பிரதான பாவி நான்.' என்று அறிகை செய்தார். பிரியமானவர்களே, கருப்பொருளாவது, அன்றும், இன்றும், என்றும், எந்த மனிதர்களுடைய பெலத்தினாலும், தேவ கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றி முடிக்க இயலாது. அப்படியானால் தேவனுடைய கட்டளைகள் அவசியமற்றதா? இல்லை, அவசியமானது. எனவே சட்டதிட்டங்களை கைகொள்கின்றேன் என்று பெருமை பாராட்டாமல், செய்ய முடியாததை செய்யும்படி நம்மை பெலப்படுத்தும்படி நம்மை தேடி வந்த கர்த்தராகிய இயேசுவினித்திலே சேருங்கள்.

ஜெபம்:

என் பெலவீனத்திலே உம்முடைய கிருபையை பொழிகின்ற தேவனே, என் கிரியைகளைக் குறித்து நான் மறுபடியும் மெச்சிக் கொள்ளாதபடிக்கு, உம்முடைய கிருபையிலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 5:8