தியானம் (மாசி 25, 2025)
வெளிச்சத்தின் பிள்ளைகள்
1 தெச 5:5
நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்;
தேவனுடைய அநாதி தீர்மானமானது மனிதகுலத்தின் வாழ்விலே நிறை வேறும்படிக்கு நாம் இந்த பூமிக்கும், உலகத்திற்கும் உபயோகமுள் ளவர்களாக இருக்க வேண்டும். விசுவாசிகளுடைய வாழ்க்கையிலே யாவும் சுமூகமாயும் சௌக்கியமாயும் இருக்கும் போது, ஆண்டவராகிய இயேசு கிறி;ஸ்துவின் நாமத்திலே, நற்கிரியைகளை செய்து தேவனுக்கு உபயோகமுள்ள பாத்திரமாக இரு ப்பது ஒரளவிற்கு இலகுவானதாக இருக்கும். ஆனால், தீமை நிறை ந்த உலகத்திலே, சக விசுவாசிகள் நன்மைக்கு கைமாறாக தீமை செய் யும் போது, அவர்களுக்கு மனதார நன்மை செய்வது மனித பெலத்தி ற்கு அப்பாற்பட்ட காரியமாக இரு க்கும். கோணலும், மாறுபாடான உலகத்திலே வாழ்ந்து கொண்டு, உலக போக்கிலே வாழாமலும், இருளான உலகத்தோடு ஐக்கியமாக இருக் காமல், அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்துபோய் (2 கொரி 6:17) அவர்களுக்கு மத்தியிலே வெளிச்சமாக இருப்பது எப்படி சாத்திமாகும்? இது மனித அறிவுக்கும் எட்டாத காரியமாக இருக்கின்றது. மனிதனால் ஆகாத காரியங்களை செய்து முடிப்பதற்காக, சத்திய ஆவியாகிய பரி சுத்த ஆவியானவர் நம்மோடு இருக்கின்றார். நம்முடைய பெலவீனங்க ளிலே பெலனடைவதற்கு பூரண கிருபையை தேவன் நமக்கு நாள் தோறும் பொழிகின்றார். அந்தக் கிருபையை நமக்கு தகுந்த நேரத்தில் அவர் தருகின்றார். ஆனால், நாமோ அதை விருதாவாக்கிவிடக்கூடாது. அதாவது, ஒளிக்கும் இருளுக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. எனவே, ஒரு விசுவாசியானவன், அவிசுவாசியோடு உற்ற நண்பனாக இருக்க முடியாது. முதலாவதாக, நாம் அந்த சிந்தையுள்ளவராக இருக்க வேண் டும். உலகத்தோடு நட்பை ஏற்படுத்தி, அதை பேணிப் பாதுகாப்பதற்கு தேவ வார்த்தைகளை தேடாமல், தேவ சித்தத்தை நிறைவேற்ற நான் எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கின்றேன் என்று விசுவாசியானவன் தேவ சமுகத்திலே தன்னை தான் தாழ்த்தி ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது, தேவ ஆவியானவர்தாமே, நாம் தேவசித்தப்படி, இந்த பூமிக்கும், உலகத்திற்கும் உபயோமுள்ளவர்களாக எப்படி இருப்ப தென்பதை கற்றுத் தந்து வழிநடத்திச் செல்வார். அப்பொழுது நம் வழி யாக பிதாவாகிய தேவனுடைய நாமும் மகிமைப்படுத்தப்படும். நாம் பகலுக்குரியவர்கள் என்று கூறி இருளிலே நடமாடுகின்றர்களோடு ஐக்கியமாக இருப்பது எப்படி?
ஜெபம்:
வெளிச்சத்தின் பிள்ளையாக என்னை மாற்றிற தேவனே, இருளிட்குட்பட்டவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்க பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 கொரி 6:14-15