தியானம் (மாசி 24, 2025)
உலகத்தின் வெளிச்சம்
மத்தேயு 5:15
விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
புதிதாக கம்பனியிலே இணைந்து கொண்ண விசுவாசியாகிய வாலிபனொருவன், அங்கே அவிசுவாசியான ஒருவனோடு நண்பனாகிவிட்டான். அவர்களுக்குள்ளே எழுதப்படாததும், பரஸ்பர புரிந்துணர்வுவோடுகூடிய ஒப்பந்தம் இருந்தது. அதன்படிக்கு, அவர்கள் மதநம்பிக்கைகளைபற்றி ஒருபோதும் பேசிக் கொள்ளாமலும், அவிசிவாசியானவன் சத்தியத்தை விட்டு விலகி நடந்தாலும், அதை கண்டித்து உணர்தாமலும் இருப்போம் என்பதாகும். விசுவாசியானவன், அவிசுவாசியானவனுடன் உல்லாச பயணங்கள், சுற்றுலாக்கள் செல்லும் போது, ஞாயிறு ஆராதனைகள், ஜெபக்கூட்டங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட ஆயத்தமுள்ளவனாக இருந்தான். ஆனால், அவிசுவாசியானவனின் விரத நாட் கள் வரும்போது, அதைக் குறித்து எதையும் எவரும் பேசிக் கொள்ளவோ, தடைசெய்யவோ முடியாது. அந்த விசுவாசியானவன், நியாயம் என்ன? தான் நித்திய ஜீவனை அடையும் வழியிலே நடப்பதைவிட, அந்த அவிசுவாசியானவனை தன் நடக்கையினாலே இரட்சிக்கும்படியான அழைப்பையே தான் பெற்றி ருக்கின்றேன் என்று எண்ணிக் கொண்டான். தெய்வீக ஒளியை உங்களுக்குள் பெற்ற அருமையான சகோதர சகோதரிகளே, தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, 'அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.' (2 கொரி 4:4). அந்த ஒளியை பெற்ற நீங்களோ, முதலாவதாக, வஞ்சிக்கப்பட்டு போய்விடாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள். இந்த உலகத்திலுள்ள நட்புகள், உறவுகளைவிட்டு முற்றிலும் நாம் பிரிந்திருக்க முடியாது. ஆனால், உலகத்திலுள்ளவர்களில் சிலர் உங்கள் நண்பர்களாகவும், நெருங்கிப் பழகும் உறவுகளாகவோ இருந்தால், அவர்கள் உங்களில் தெய்வீக ஒளியை காண இடங் கொடுக்கும்படிக்கு, அந்த வெளிசத்தை மறைத்து வைக்காதிருங்கள். அவர்களில் அநியாயங்களையும், அநீதிகளையும், பாவங்களையும் காணும்போது, வேத வார்த்தையின்படி அதை அவர்களுக்கு உணர்த்தி, அதன் பின்விளைவுகைள கூறுங்கள். அதை உங்களுக்கு கூறமுடியவில்லை என்றால், நீங்கள் யாரைப் பிரியப்படுத்தப் பார்க்கின்றீர்கள் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்
ஜெபம்:
நல் ஆலோசனைகள் தரும் பரம தகப்பனே, உம்முடைய ஆலோசனைகளை நான் அசட்டை பண்ணாமல், நீர் காட்டும் நேரிய வழியிலே செல்ல எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 கொரி 11:3