புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 23, 2025)

தேவனுடைய நாமம் மகிமைப்படட்டும்

மத்தேயு 5:16

...உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவன், தன் உழைப்பின் பிரயா சத்தின் பெரும்பகுதியை மதுபானத்திலும், புகைத்தலிலும் செலவு செய்து வந்தான். சில ஆண்டுகளுக்கு பின்னர், அவனுடைய மனைவியானவள், ஆண்டவர் இயேசுவை குறித்து அறிந்து, அவரை தன் சொந்த இரட்ச கராக ஏற்றுக் கொண்டாள். கணவனுடைய மனக்கண்கள் ஏற்கனவே குருடாக இருந்தது. தற்போது, அவள் குடும்பத்திலே நெருகங்களும், பாடுகளும் அதிகமாயிற்று. இந்த நிலை யிலே அவள் வாழ்க்கையிலே உலகத்திற்கு ஒளியாக இருக்க வேண் டும் என்னும் வார்த்தையை எப்படி கைகொள்ள முடியும்? அவளுக்குள்ளே பிரகாசித்த தெய்வீக ஒளியானது முதலாவதாக தன் சொந்தக் குடும்பத்திலே சுடர்விட வேண்டும். அதை எப்படி நடப்பிக்க வேண்டும். கணவனானவன், உலகத்திற்குரிய வாழ்க்கை வாழ்வதால், அவனைத் விட்டு விட முடியுமோ? இல்லை. இரட்சிப்படைந்த பின்பு, உலக போக்கிலே வாழும் நண்பர்களையும் உறவுகளையும் விட்டு சற்று விலகியிருப்பது போல, அவள் தன் கணவனை விட்டுவிலகுவது அவளுக்குண்டான ஒரு தெரிவு அல்ல. கணவனைக் காணும் போதெல்லாம், வேத வார்த்தைகளை கூறி கணவனைக் குற்றப்படுத்திக் கொண்டிருக்க வேண்டுமோ? இல்லை. பாடுகள், கஷ்டங்கள் மத்தியிலும், அவள் ஆண்டவர் இயேசு வுக்காக எரிந்து கொண்டிருக்க வேண்டும். அதன்பொருட்டு முதலாவ தாக, தான் கண்டு பேரொளியை தன் கணவனானவரும், கண்டு கொள்ள வேண்டும் என்கின்ற வாஞ்சையுடையவளாக இருக்க வேண்டும். பிரசாகமுள்ள மனக்கண்களை கணவருக்கு கொடுக்கும்படியாக அனுதி னமும் ஊக்கமாக வேண்டுதல் செய்ய வேண்டும். 'அந்தப்படி மனை விகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப் பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர் களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினா லேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.' (1 பேதுரு 3:1-2). புரிசுத்த வேதாகமம் கூறும் குணசாலியான ஸ்திரியைப் போல, (நீதி 31:10-12). தன் கணவனின் வழியாக, தன்னில் திவ்விய சுபாவங்கள் உரு வாகுவதற்கு தன்னை விட்டுக் கொடுக்க வேண்டும். அப்பொழுது, அவளுடைய கீழ்படிவையும், ஒழுக்கத்தையும் காணும் மனிதர்கள், அவளிலே உண்டாயிருக்கும் நல்ல மாற்றங்களை கண்டு அவளிலே உண்டான மாற்றங்கள் தேவனாலே உண்டானது என்று அறிந்து கொள்வார்கள்.

ஜெபம்:

செம்மையான வழியிலே என்னை நடத்தும் தேவனே, வாழ்வு தரும் உம்முடைய திருவார்த்தைகளை நான் தியானித்து அந்த வார்த்தைகளின் வழியிலே நான் வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபே 5:22-23