புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 21, 2025)

உலகத்திலே சுடர்விடுங்கள்

பிலிப்பியர் 2:14

ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,


உப்பு அதன் சாரத்தை இழந்து போனால் அதற்கு மேற்கொண்டு வேறு உபயோகம் இல்லாதது போல, வெளிச்சமானது அதன் ஒளியை வீசா விட்டால், அதை அதன்பின்பு வெளிச்சம் என்று கூறமுடியாது. நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கின்றீர்கள் என்று ஆண்வராகிய இயேசு தம்மைப் ஏற்றுக்கொண்டு, பின்பற்றுகின்றவர்களை குறித்து கூறியிரு க்கின்றார். ஒளிவீசும் போது வெளி ச்சம் உண்டாவதால், அந்த வெளி ச்சத்திலே நடப்பவர்கள் இடறி விழாமல் நடப்பதற்கு பாதையை கண்டு கொள்கின்றார்கள். இந்த உலகத்திலே, தேவனை அறியாத அவிசுவாசிகளும், பலருக்கு வழி காட்டிகளாக இருக்கின்றார்கள். பல தானதர்மங்களையும் நன்மை களையும் செய்து வருகின்றார்கள். அவர்கள் ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கள் எப்படிப்பட்ட நன்மைகளை செய்தாலும், பரலோகத்திற்கு செல்லும் வழியை அறிவார்களோ? அவர்கள் இந்த உலகத்திற்கு ஆண்டவராகிய இயேசு கூறும் வெளிச்சமாக பிரகாசிக்க கூடுமோ? இல்லை. குருடருக்கு குருடர் வழிகாட்டிகளாக இருக்க முடியாது என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அப்படியானால், நம்மிடத்தில் பிரகாசிக்கும் வெளிச்சத்தின் மேன்மை என்ன? நாம் எடிப்படியாக இந்து உலகத்திற்கு வெளிச்சமாக இருக்க முடியும்? ஏழைகளுக்கு தானதர்மங்கiளும் உதவிகளையும் செய்து வந்தால் போதுமோ? அவிசுவாசிகளும், அஞ்ஞானிகளும் அப்ப டியே செய்து வருகின்றார்கள் அல்லவா? 'நீங்களோ, உங்களை அந்த காரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழை த்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ள ப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதி யாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். முன்னே நீங் கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவரு டைய ஜனங்களாயிருக்கிறீர்கள்;' எனவே முதலாவதாக நம்முடைய வா யின் அறிக்கையினாலும், நம்முடைய செயல்களினாலும் நம்மை அழை த்த வருடைய புண்ணியங்களை அறிவிக்க வேண்டும். தேவ ஜனங்கள் என்று பெயர் பெற்றிருக்கும் நாம் அந்த பெயருக்கு பாத்திராக நடந்து கொள்ள வேண்டும். வீட்டிலும், கல்வி நிலையங்களிலும், வேலை இட ங்களிலும், வெளி இடங்களிலும், நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும், இந்த வெளிச்சமானது எப்பொழும் எங்களிலிருந்து வீசப்பட வேண்டும்.

ஜெபம்:

திவ்விய ஒளியை என்மேல் பிரகாசிப்பிக்க பண்ணின தேவனே, அந்த ஒளியிலே நான் நடக்கின்றவனாகவும், அந்த ஒளியை மற்றவர்கள் மேல் வீசுகின்றவனாகவும் இருக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:14-16