புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 20, 2025)

நம்முடைய உபயோகம்

1 யோவான் 2:15

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதா வின் அன்பில்லை.


நம்முடைய வாழ்வு இந்த பூமியிலே உபயோகமள்ளதாக இருக்க வேண் டும் என்பதின் ஆழத்தை தெரிவிப்பதற்காக, ஆண்டவராகிய இயேசு தாமே, நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கின்றீர்கள் என்று கூறி யிருப் பதை நாம் கடந்த சில நாட்களாக தியானித்து வருகின்றோம். உப்பா னது அதன் உருவத்தை இழ ந்து, உணவுப் பதார்த்தங்கள் கெட்டுப் போகாமல் பேணிப் பாதுகாக்கின்றது. அது அதன் உருவத்தை இழந்தாலும், அதன் சாரத்தை இழந்து போ வதில்லை. அதுபோல, நாமும் இந்த உலகத்திலே நான் இன் னார் என்கின்ற அடை யாள த்தின் மேன்மையை இழந்து போக நேரிட்டாலும்;, திவ்விய சுபாவத்தின் இயல்பினை இழந்து போகக்கூடாது. எதற்காக? இந்த உலகிலே கல் வியை பெருகப்பண்ணுவதற்காகவா? நம் வாழ்விலும், மற்றவர்கள் வாழ் விலும் பூமியில் உண்டான பொருளாதாரத்தை பெரு கப் பண்ணுவ தற்காகவா? பூமியை சுத்தமாக வைத்திருப்பதற்காகவா? இவைகளிலே பிரயோஜனங்கள் உண்டு ஆனால், அவை ஒருவரையும் தேவனுடைய ராஜ்யதத்திற்கு இட்டுச்செல்வதில்லை. பூமிக்குரியவைகளைக் குறித்து பரிசுத்த வேதாகமம் கூறும் சில ஆலோசனைகளை இன்று ஆராய்ந்து அறிந்து கொள்வோம். 'பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர் த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடு க்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சி யாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமி ட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.' (மத்தேயு 6:19-21). நீங்கள் கிறி ஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரி சத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். (கொலோ 3:1-2). அதாவது, நம்முடைய உபயோகமானது, மற்றவர்களை ஆண்டவர் இயேசுவோடு சேர்ப்பதாக இருக்க வேண்டும். அழிந்து போகும் இந்த பூமியின்மேல் ஆசை வைத்து, மனிதர்கள் அழியாமையை இழந்து போகாதபடிக்கு, மனித குலமானது நன்மையை பெற்றுக் கொள்ளும் படிக்கு, நாம் தேவனுடைய ராஜ்யத்தின் மகிமைக்காக வாழ வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த பூமியையும் அதிலுள்ளவைகளையும் பற்றிக் கொள்ளாமல், உம்முடைய ராஜ்யத்தின் மேன்மைக்காக உபயோகமுள்ள பாத்திரமாக நான் வாழும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:14