புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 19, 2025)

யாருக்கு நன்மை செய்ய வேண்டும்?

லூக்கா 6:33

உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன?


நீதியையும் நியாயத்தையும் குறித்து வைராக்கியமுள்ள வாலிபனொருவன், தன் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக, தன் பட்டனார் வசிக்கும் ஊருக்கு சென்றிருந்தார். அநேக ஆண்டுகளாக விசுவாசியாக இருந்த அந்த பட்டானாருடைய வீட்டிற்கு இடப்பக்கத்திலுள்ள குடும்ப த்தினர், நெறிமுறைகளோடு வாழ்பவர்களும், நன்மை செய்கின்றவர்களும், நன்றியுள்ளவர்களுமாக இருந்து வந்தனர். அவருடைய வீட் டிற்கு, வலப்பத்திலுள்ள வீட்டிலே பல ஆண்டுகளாலமாக வசித்து வந்த தம்பத்தியினர், தங்கள் ஆதாயத்திற்காக நீதி நியாயங்களையும் புரட்டுகின்றவர்களாக இருந்து வந்தார்கள். ஆனாலும், அந்தப் பட் டனார், முகத்தாட்சண்யம் இல்லாமல், இரண்டு குடும்பங்களுக்கும் நன்மை செய்கின்றவராகவே இருந்து வந்தார். அதைக் கண்டு அந்த வாலிபனானவன், தன் பட்டனாரை நோக்கி: தாத்தா, நீங்கள் ஏன் அநீதியின் வழிகளை ஆதரிக்கின்றவர்களுக்கும் நன்மை செய்ய வேண் டும். அவர்களிடத்தில் எதைக்குறித்து எந்த நன்றியும் இல்லையே என் றான். அதற்கு பட்டனானவர் மறுமொழியாக: தம்பி, முற்றத்திலே நிற்கி ன்ற மாமரத்தின் கனியை ருசி பார்த்திருக்கின்றாயா என்று கேட்டார். அதற்கு அவன், அது நல்ல சுவையான கனிகளை கொடுகின்றது என்றான். பட்டனானவர் அவனை நோக்கி: அந்த மரம் யாருக்கு நல்ல கனியை கொடுக்கும், நீதி செய்கின்றவர்களுக்கோ அல்லது அநீதி செய்கின்றவர்களுக்கோ என்றார். அதற்கு அவன்: அது யாவருக்கும் ஒரே விதமான கனியையே கொடுக்கும் என்றான். அதற்கு அவர்: தம்பி, அப்படியாகத்தான் கிறிஸ்துவை பின்பற்றுகின்றவர்களின் வாழ்க்கையும் இருக்க வேண்டும். நம் வாழ்க்கையிலே நாம் நல்ல கனியை கொடு ப்பது, மற்றவர்களுடைய சுபாவத்தை குறித்ததல்ல, மாறாக அந்த திவ்விய சுபாவம் எங்களுடைய இயல்பாக மாற வேண்டும். அந்த மேலான சுபாவத்திலே நாம் அனுதினமும் வளர வேண்டும் என்று அவ னுக்கு ஆலோசனை கூறினார். பிரியமானவர்களே, பூமிக்கு உப்பாக இருப்பதும் அவ்வண்ணமாகவே, நம்முடைய இயல்பாக இருக்க வேண் டும். நம்முடைய சுய பெலத்தினால், எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் சம்பூரணராக இருந்துவிட முடியாது. ஆனால், நாம் அப்படிப்பட்ட சுபாவத்திலே வளர வேண்டும் என்று எண்ணமும் வாஞ்சையும் நம்மிடத்;தில் இருக்கும் போது, தேவ ஆவியானவர் தாமே, ஆகாததை ஆகும்படியாக செய்வார்.

ஜெபம்:

உன்னதத்திலே வாசம் செய்யும் என் பிதாவாகிய தேவனே, உம்முயைட பிள்ளையாகிய நான், அனுதினமும் கிறிஸ்துவின் சாயலிலே மறுரூபமாகும்படி எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:48