புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 17, 2025)

உப்பானது சாரமற்றுப்போனால்....

லூக்கா 14:34

உப்பானது சாரமற்றுப்போ னால்இ எதினால் சாரமாக்க ப்படும்?


நம்முடைய ஆண்டவராகிய இயேசுதாமே, தம்மைப் பின்பற்றி வாழும் வாழ்க்கையை குறித்து பேசும் போது, பூமிக்கு உப்பு எவ்வளவு அவசி யமாக இருக்கின்றதோ, அதுபோல ஒரு விசுவாசியானவனும், இந்த பூமி க்கு பிரயோஜமுன்னவாக இருக்க வேண்டும். உப்பு அதன் சாரத்தை இலகுவிலே இழந்து போகாதது போல, ஒரு விவாசியானவனும், விசு வாசிக்குரிய சாரத்தை இழந்து போய் விடக் கூடாது. ஒரு விவாசிக்கு இரு க்க வேண்டிய இயல்பான சுபாவங் கள் சிலவற்றை பார்ப்போம். ஏதேனி லே ஏற்பட்ட, பூர்வீக பாவத்தன் விளை வினால், மனித குலத்திற்கு ஏற்பட்ட, நிவர்த்தி செய்ய முடியாத மனித சுபா வத்தின் உள்ளார்ந்த சீர்கேட்டைப பற்றியும், மனிதர்களுடைய எந்தக் நற்கிரியைகளினாலும் ஈடு செய்ய முடியாத நித்திய ஆக்கினையை குறி த்த உணர்வுள்ள இருதயம். மீட்பராகிய இயேசு கிறிஸ்து இல்லாமல், ஏதும் செய்ய முடியாத என்பதை ஏற்றுக் கொள்ளும் உள்ளம். பாவங் களை மறைத்து வைக்காமலும், குற்றங்களை நியாயப்படுத்தாமலும், அவற்றை ஏற்றுக் கொண்டு, மீறுதல்களுக்காக துயரப்பட்டு, அவற்றை அறிக்கை செய்து விட்டு விடுகின்ற இருதயமும். தேவ திட்டத்தின்படி அவருடைய சித்ததை நிறைவேற்றும் மனத்தாழ்மையும், நீடிய பொறு மையும், சொந்த வாழ்விலும், இந்தப் பூமியிலும் தேவ நீதி நிறைவேற வேண்டும் என்கின்ற வாஞ்சையும், ஏழு முறைமட்டுமல்ல, ஏழெழுவது முறை மன்னித்து மறந்து விடுகின்ற இரக்கமுள்ள இருதயமும், மாசி ல்லாத தேவ உறவை பேணிப் பாதுகாப்பதும், பரலோகத்தோடு பெற்ற சமாதானத்தை, மற்றவர்களுக்கு அறிவிக்கின்ற வாழ்க்கையும், தேவ சித்தம் சொந்த வாழ்விலே நிறைவேறும்படி, கிறிஸ்துவுக்காக துன்பங் களை, சந்தோஷத்துடன் சகித்துக் கொள்ளும் இருதயமும் அவசிய மானது என்று ஆண்டவராகிய இயேசு தாமே மலைப் பிரசங்கத்தின் ஆரம்பத்திலே பாக்கியம் பெற்றவர்கள் யார் என்று கூறியிருக்கின்றார். உலக தோற்றத்திலிருந்து உப்பானது, அதன் சாரத்தை மாற்றிக் கொள் ளாதது போல, கிறிஸ்தவனும் காலத்திற்கு காலத், பருவத்திற்கு பரு வம், நேரத்திற்கு நேரம், விசவாசியின் இயல்புகளை மாற்றிக் கொள்ள க்கூடாது. அப்படி மாற்றிக் கொள்பவன், தன் இஷ;டப்படி சாரமிழந்து உப்பைப் போல மாறிவிடுகின்றான். சாரழிழந்து உப்பின் உபயோகம் என்ன? 'உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சார மாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள்.' (லூக்கா 14:34)

ஜெபம்:

அநாதி ஸ்நேகத்தினால் என்னை நேசித்த தேவனேஇ உமக்கு உபயோகமற்ற பாத்திரமாக நான் மாறிவிடாமல்இ உமக்கு ஏற்ற பாத்தி ரமாக நான் திகழும்படிக்கு என்னை பெலப்படுத்தி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 15:1-5