புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 16, 2025)

அர்த்தமுள்ள பதவி

மத்தேயு 5:13

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்;


ஒரு தேசத்தின் ராஜாவானவன், தன் ஆளுகைக்கு உட்பட்ட குறிப்பிட்ட ஊரொன்றிலே வாழும் குடிமக்கள், சில அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு, பல கஷ்டங்களை அனுபவத்து வருகின்றார்கள் என்று அறிந்து கொண்டான். ராஜா விதிக்காத பாரமான வரிகளையும் சுமைகளையும் ஜனங்கள் மேல் சுமத்தி, தங்களுக்கு ஆதயம் உண்டு பண்ணி வந்தார்கள். அதனால், ராஜாவானவன், தனக்கு நம்பிக்கைக்கு பாத்திரராக இருந்த ஒரு மந்திரியை தெரிவு செய்து, அந்த ஊருக்கு தன் ஸ்தானாதிபதியாக அனுப்பி, அந்த ஊரிலே நடக்கும் முறைகேடுகளை கண்டிறிந்து, அதற்குரிய தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அவனுக்கு வேண்டிய ஆலோசனைகளையும், ஆதரவுகளையும் வழங்கி, போர் வீரர்களையும் அவனுக்கு உதவியாக இருக்கு ம்படி அனுப்பி வைத்தான். குறிப்பிட்ட ஊருக்கு வந்த அந்த ஸ்தானாதி பதியானவன், அங்குள்ள அதிகாரிகளின் காரியங்களை ஆராய்ந்து பார் த்த போது, அந்த அதிகாரிகள், அந்த ஸ்தானாதிபதிக்கு, அநேக வெகு மதிகளை கொடுத்து, அவனை தங்கள் பக்கமாக திருப்பிக் கொள்ளு ம்படி பல யுக்திகளை மேற் கொண்டார்கள். ஆனால், அந்த ஸ்தானாதிபதியோ, ராஜபக்தியுள்ளவனாக இருந்ததால், ராஜா தனக்கு கொடு த்த பணியிலே மிகவும் கருத்துள்ளவாக இருந்தான். அவன் தான் வந்த நோக்கத்தை மறந்து போகாமல், ராஜ சேவையை நிறைவேற்றி முடிப்படிதிலே கண்ணும் கருத்துள்ளவனுமாக இருந்தான். அதனால், அவனுக்கு கொடுக்கபட்ட ஸ்தானாதிபதி என்னும் பெயர் கருத்துள்ளதாகவே இருந்தது. ஆனால், ராஜாவினால் நியமிகக்கப்பட்ட அதிகாரிகளோ, தங்கள் பதவிக்கேற்றபடி நடக்காதிருந்ததால், அந்தப் பதவி கருத்தற்றதாகவும், நோக்கமிழந்ததாவும் இருந்தது. உப்பின் உபயோகத்தைப் பற்றி நாம் யாவரும் நன்றாக இருந்திருக்கின்றோம். உப்பானது அதன் சாரத்தை இலகுவிலே இழந்து போகாது என்று இராசாயனவியலைப் பற்றி அறிந்தவர்கள் கூறிக் கொள்கின்றார்கள். அப்படியிருந்தும், அது அதன் சாரத்தை இழந்து போனால், அதன் பின்னர் அதை உப்பு என்று அழைப்பது கருத்தற்றதும் நோக்கம் இழந்தமுதுமாக இருக்கும். அதுபோலவே ஒரு விவாசியானவன், தன் அடிப்படை குணதிசயமான ஆவியின் எளிமையை இழந்து போகும் போது, அவன் அழைக்கப்பட்ட அழைப்பின் நோக்கத்தை இழந்து போய்விடுகின்றான். அதன் பின்னர் அவன் தன் தப்பிதங்களுக்காக மனம் வருந்தாமலும், தேவ சித்தத்தை நிறைவேற்றக் காத்திராதவனும், தேவனோடு மற்றவர்களை சேரக்காதவ னு;மாக மாறிவிடுகின்றான்.

ஜெபம்:

நித்திய வாழ்வை சுதந்தரித்துக் கொள்ள என்னை அழைத்த தேவனே, இந்த பூமியிலே வாழும்வரை நான் என் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உணர்ந்து செயற்படுகின்றவனாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:10