புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 14, 2025)

பயப்படாமல் இருங்கள்

1 பேதுரு 3:14

அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து,


ஒரு ஊரை ஆண்டு வந்த அதிகாரியானவனின், குமாரனானவன், சில பாவமான காரியங்களையும், நெறிகெட்ட செயல்களையும் செய்து வந் தான். அவன் செய்து வந்த கிரியைகளை குறித்து ஆசையுள்ளவர்கள், அதிகாரியின் குமாரனுடைய பக்கமாக சேர்ந்து கொண்டார்கள். அதி காரியின் மகனானவன், அவைகளை செய்து வருவதால், எங்களுக்கு தண்டனைகள் ஏதும் கிடைகாது என்று எண்ணிக் கொண்டார்கள். ஆனால்;, அந்த ஊரிலே, செம்மை யான வழியிலே வரும் சிலருக்கு, ஊரிலே அக்கிரியைகள் அருவரு ப்பாக இருந்தது. அந்த அதிகாரியா னவன், தன் மகனானவனை கண்டி த்து திருத்துவதற்கு பதிலாக, செம்மை யான வழியிலே வாழும் மனிதர்களு க்கு சரிகட்ட வேண்டும் என்று தீர்மா னம் செய்து, தன் குமாரனானவன், செய்து வரும் தகாத கிரியைகளு க்கு எதிராக இருந்த சட்டத்தை தள்ளிவிட்டு, அந்த பாவமான, நெறி கெட்ட செயல்களை சட்டமாக்கிக் கொண்டான். அதனால், அந்த பாவ மான நெறிகெட்ட கிரியைகளை எதிர்த்து நிற்கின்ற செம்மையானவர் கள், ஊரின் சட்டத்தின்படி குற்றவாளிகளாக காணப்பட்டார்கள். ஊரின் சட்டத்தின்படி தண்டனைக்கு பாத்திரரானார்கள். அப்படியிருந்தும், செம் iமான வழியிலே வாழ்பவர்களின் நற்பண்புகள், அவர்களின் சுபாவ மாக இருந்ததால், அவர்கள் தண்டனைகளை எதிர்நோக்க நேர்ந்தாலும், தங்கள் நற்பண்புகளை விட்டுவிடாதிருந்தார்கள். இப்படியாக இன்றைய நாட்களிலே, நாகரீகம் என்ற போர்வையிலே, சில நாடுகளிலே, பரிசுத்த வேதாககம் அசுத்தம் என்று கூறுகின்ற சில காரியங்களை சட்டாக்கி வருகின்றார்கள். அந்த சட்டதிட்டங்களை ஏற்றுக் கொண்டு சார்ந்து நட க்கின்றவர்கள் அநேகரால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றார்கள். சில சபை களும் பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமான சட்டதிட்டங்களுக்கு தங் களை ஒப்புக் கொடுகின்றார்கள். அத்தோடு கிறிஸ்துவை பற்றிக் கொ ண்டு சத்தியத்தின்படி வாழும் தேவ பிள்ளைகளையும் அவர்கள் எதிர் த்து நிற்கின்றார்கள். அதனால் என்ன, கர்த்தருக்கு பயந்து செம் மையான வழியிலே நடக்கும் தேவ பிள்ளைகளோ, இவைகளை கண்டு சோர்ந்து பின்வாங்கிப் போவதில்லை. மாறாக, அவர்கள் தேவ ஆவி யினாலே பலத்தின் மேல் பெலனடைகின்றார்கள். அவர்களுக்கு வேண் டிய கிருபையை கர்த்தர் அனுதினமும் அவர்கள் மேல் பொழிகின்றார். நீங்களும் இத்தகைய பயமுறுத்துதலுக்கு பயப்படாமல், உறுதியுள்ள மனதோடு கர்த்தரை சார்ந்து வாழுங்கள்.

ஜெபம்:

நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப் பீர்கள்; என்று கூறிய தேவனே, உமக்கெதிராக மனிதர்களின் பயமுறுத்தலுக்கு நான் பயப்படாமல், உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 8:35-39