புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 12, 2025)

உலகம் உங்களை ஏற்றுக் கொள்ளின்றதா?

யோவான் 15:19

நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்;


எங்கள் வாழ்க்கையைப் பாருங்கள், நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறி தேவ நீதியை நிறைவேற்றும் பாதையில், எந்த துன்பத் தையும் அனுபவியாமல், அவிசுவாசிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களோடு நட்பு பாராட்டி, உலக செழிப்புடன் சுக போகமாக வாழ் ந்து கொண்டு, தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக் கொள்கி ன்றவர்களை குறித்து எச்சரிக்யையுள்ளவர்களாக இருங்கள். 'நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ் துவுக்கும் பேலியாளுக்கும் இசை வேது? அவிசுவாசியுடனே விசுவாசி க்குப் பங்கேது?' (2 கொரி 14-15) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகி ன்றது. இருளிலே வாழ்பவர்கள், திவ்விய ஒளியைக் கண்டடைய வேண்டும் என்று நாம் ஜெபம் செய்ய வேண்டும். ஆனால், அந்த ஆச்சரியமான ஒளியை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரைக்கும், ஒருவன் இருளிலே வாழ்பவர்களுடன் ஐக்கிய மாக இருந்தால், அவன் தன் பாதுகாப்பின் வேலியை தகர்த்துப் போடு கின்றவனாக இருக்கின்றான். குறித்த காலத்திலே அவன் கிரியைகளின் பின்விளைவுகள், இந்த உலகத்திலே வெளியாக்கப்படும். நித்திய ஜீவனுக்கென்று அழைப்பைப் பெற்ற பிரியமான சகோதர சகோதரி களே, 'இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசி யுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிரு க்கிறது. அதின் வழி யாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிற வர்கள் சிலர்.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். நீங்கள் போகின்ற வாசல் விரிவாதனாகவும் வழி விசாலமாகவும் இருக்கின்றதா என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். இந்த உலகத்தார் வாழும் பிரகாரமாக வாழ்வதற்கு, நீங்கள் ஆராதிக்கின்ற இடத்திலே எந்த தடையும் கண்டிப்பும் இல்லாதிருந்தால், நீங்கள் போகின்ற வழியைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். 'உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக் கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தா ராயிரு ந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத் தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

அழியாமையைத் தரித்துக் கொள்ளும்படி என்னை வேறு பிரித்த தேவனே, இந்த உலகத்தின் ஆசீர்வாதங்களினாலே நான் இழுப்புண்டு, உம்மைவிட்டு தூரம் போகாதபடிக்கு என்னைக் காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 11:38