புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 11, 2025)

பரலோக கைமாறு மிகுதியாயிருக்கும்

வெளிப்படுத்தல் 22:12

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.


இன்று சில நாடுகளிலே, கிறிஸ்துவின் நற்செய்தியின் நிமித்தம், விசுவா சிகள் வெளிப்படையாக துன்புறுத்தப்படுவதை கேள்விப் படுகின்றோம். வேறு சில நாடுகளிலே, சுதந்திரம் அதிகமாக இருப்பதினாலே, சிலர், அந்த சுதந்திரத்தை தங்கள் துர்குணத்திற்கு மூடலாக உபயோகித்து, சத்தியத்தை விட்டு விலகி, சத்தியத்தின்படி நடக்கின்ற தேவ பிள் ளைகளை, நாட்டுச் சட்டங்ளூடாகவும், இன்றும் பல வழிகளிலே அவ ர்களை ஒடுக்கும்படிக்கு முய ற்சி செய்து வருகின்றார்கள். ஆனால், சத்தியத்தைவிட்டு வில காமல், தங்களை அழைத்த ஆண் டவராகிய இயேசு கிறிஸ்து வுக்கு உண்மையுள்ள விசுவா சிகள், எந்த சூழ்நிலையிலும், சத் தியத்தை விட்டு விலகாமல், நீதி யின் பாதையிலே வரும் துன்ப ங்களை சகித்துக் கொள்கின்றார்கள். ஒருவேளை சில நாடுகளிலே, அந் தத் துன்பங்கள் ஒப்பீட்டளவிலே இலகுவானதாக இருக்கலாம். ஆனா லும், அந்நாடுகளிலே வாழும் கிறிஸ்தவர்கள், சிறிய காரியங்களில்கூட சமரசம் பேசி, நீதி நியாத்தை புரட்டாமல், தேவ நீதியிலே நிலை த்திருக்கின்றார்கள். வேலை இடங்களிலே, பாடசாலைகளிலே, நண் பர்கள் உறவினர்கள் மத்தியிலே, தற்போது அவர்களுக்கு ஏற்படும் துன் பம் இலகுவானதாக இருந்தாலும், அவைகள் பெருகும் போது, அவை களை கிறிஸ்துவின் நிமித்தம் சகித்துக் கொள்ளும்படிக்கு, தேவ காரி யங்களைக் குறித்த அவர்களுடைய மனநிலை தற்;போது ஏற்புடை யதாகவே இருக்கின்றது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்ப ப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;. சந்தோஷப் பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத் தினார்களே என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, தேவ நீதியின்படி வாழும் போது, பாடுகளும், உபத்திரவங்கள், நிந் தைகள் உண்டாகலாம். நீங்கள் நன்மை செய்யும் போது, அதற்குகு பதிலாக மற்றவர்கள் உங்களுக்கு தீமை செய்யலாம். அந்த வேளை யிலே மனமுடைந்து, சோர்ந்து போகாமல், சத்தியத்திலே நிலைத் திருங்கள். கிறிஸ்துவுக்குள் சந்தோஷப்பட்டு களிகூருங்கள். ஏனெனில், இப்போது ஏற்படும் பாடுகள் அநித்தியமானவைகள், ஆனால் இனி வரவிருக்கும் கன மகிமையானது நித்தியமானது.

ஜெபம்:

அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிக்கும் தேவனே, நான் சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, அழியாமையை தேடுகின்ற உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:11-12