புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 10, 2025)

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள்

மத்தேயு 5:10

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.


ஒரு தேசத்திலே வாழ்ந்து வந்த குடியானவன் ஒருவன், தேசப்பற்றற் றவனாக வாழ்ந்து வந்தான். தேசத்தின் ராஜாவானவன் நீதியாக தேசத்தை ஆட்சி செய்து வந்த போதும், அந்த தேசத்தின் ராஜாவைக் குறித்தும், ராஜாவின் ஆளுகையைக் குறித்தும் திருப்தியற்றவனாக இருந்து வந்தான். அதனால், அவன் மனதிலே ராஜாவையும், ராஜ் யத்தையும் குறித்து நல்இணக்கம் இல்லாதவனாக இருந்து வந்தான். ஆளுகையைக் குறித்த சமாதானத் திற்கு பதிலாக முறுமுறுப்பும், முறை யீடும் இருந்தது. தன் பக்கத்திற்கெ ன்று ஜனங்களை சேர்க்கும்படி ராஜ விற்கும், ஜனங்களுக்கும் இடையிலே பிரிவினைகள் உண்டாக்கும்படியான ஆலோசனைகளை சொல்லி வந்தான். இப்படியாக இருக்கும் வேளையிலே, தேசத்தின் ஆளுகையை குழப்பும்படிக்கு எதிரிகள் சதி செய்யும் போது, தேசத்தைக் குறித்த நல்லிணக்கம் இல்லாத அந்தக் குடியானவன், தேசதில் நீதி, நியாயம் பேணப்படும்படியாக கஷ;டங்களையும் நெருக் கடிகளையும் எப்படி சகித்துக் கொள்வான்? அவன் எப்படி ஒருமனப்ப டுதலைக் குறித்து பேச முடியும்? தேவனுடைய ராஜ்யத்திற்கென்று வேறு பிரிக்கப்பட்ட அருமைய சகோதர சகோதரிகளே, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்த உணர்வற்றவன் எப்படி அதை வாஞ்சிப்பான்? எந்த ராஜ்யத்தைக் குறித்து அவன் உள்ளத்திலே வாஞ்சை இருக்கி ன்றதோ, அந்த ராஜ்யத்தை தேடும்படிக்கு அவன் இடம் கொடுப்பான் அல்லவா? இன்னுமொருவிதமாய் கூறுவோமாக இருந்தால், ஒருவனு டைய மனதிலே எந்த ராஜ்யத்தைக் குறித்த வாஞ்சை நிறைந்திருக்கி ன்தோ, அவன் வாழ்க்கையிலே அதைக் சார்ந்த கனிகளே வெளிப்படும். தேவனுடைய ராஜ்யத்தையும், ராஜாதி ராஜாவாகிய இயேசுவின் ஆளு கையின் பெருக்கத்தையும் விசுவாசக் கண்களினாலே காண்கின்றவன், அந்த மேன்மையை தான் அடையும்படிக்கு தன் வாழ்விலே எதையும் இழந்து போவதற்கு ஆயத்தமுள்ளவகாக இருப்பான். அதன் மகத்துவ த்தைக் குறித்த சமாதானத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவி ப்பான். ராஜாதி ராஜாவின் நிமித்தம் நிந்தைகளையும், துன்பங்களையும், பொய்யாக சொல்லப்படும் வசைச் சொற்களையும் சகித்துக் கொள் வார்கள். முன்னோடிகளாக இருந்த தேவனுடைய தீர்க்கதரிகளுக்கும் அப்படியே செய்தார்கள். சந்தோஷப்பட்டு களிகூருங்கள் பரலோக பலன் மிகுதியாக இருக்கும்.

ஜெபம்:

நித்திய ராஜ்யத்திற்காக என்னை பிரித்தெடுத்த தேவனே, நான் உம் முடைய ராஜ்யத்தை மேன்மையை உணர்ந்து கொள்ளும்படிக்கு, பிரகா சமுள்ள மனக்கண்களைத் தந்து உம்முடைய வார்த்தையின் வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 11:37