தியானம் (மாசி 09, 2025)
தேவ ஆவியினால் ஆகும்
2 கொரிந்தியர் 4:13
விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடைய வர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்.
கிறிஸ்துவின் சுவிசேஷத்தினிமித்தம் பல துன்பங்களை சகித்த தேவ ஊழியராகிய பவுல் என்பவர்: 'நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை'. மேலும், 'ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை. எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகி றது. மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவை களை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனம கிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் என்று கூறியிருக்கின்றார். தேவ நீதியானது தங்கள் வழியாக நிறைவேறும்ப டிக்கு, தங்களை அழைத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் போல, பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை இந்தப் பூவுலகிலே, தங் கள் வாழ்க்கை வழியாக நிறைவேறும்படிக்கு, தங்களைத் தாழ்த்தி தேவ சித்தம் தங்களில் நிறைவேற இடங் கொடு த்தார்கள். நன்மை செய்து பாடநுபவிக்கின்ற போது, முறுமுறுக்காமல், ஆரம்பத்திலே கொண்ட விசுவாசத்திலே நிலைத்திருந்தார்கள். கர்த்த ராகிய இயே சுவினுடைய ஜீவன் தங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் தங்கள் சரீரத்தில் சுமந்து திரிந்தார்கள். நீதிக்கு பதிலாக அநீதி இளைக்கப்படும் போது, தங்கள் மாம்சத்தின்படி போராடாமல், தங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது என்று தேவ நீதி நிறைவேற தங்களை ஒப்புக் கொடு த்தார்கள். விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடி, நீதியின் கிரீடத்தை தங்களுடையதாக்கிக் கொண்டார்கள். பிரியமானவர்களே, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி பொறுமையோடு ஓடிக் கொண்டிருக்கும் நீங்கள், அநீதியைக் கண்டு சோர்ந்து போய்விடாதி ருங்கள். ஆரம்பத்திலே கொண்ட விசுவாசத்திலே நிலைத்திருங்கள். நம்மால் கூடாததை நிறைவேற்றி முடிக்கும்படிக்கு தேவ கிருபை என்றுமுள்ளது. மாம்சத்திலே போராடாமல், ஆவியின்படி யுத்தம் செய்யுங்கள். நீதியின் கீரிடத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
நீதியுள்ள தேவனே, இந்த உலகிலே, எனக்கு அநீதி இளைக்க ப்படும் போது, நான், மாம்ச்திலே கிரியைகளை நடப்பிக்காமல், உம்முடைய சித்தம் என்னில் நிறைவேற இடங்கொடுக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 கொரி 10:4-6