புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 08, 2025)

பாடுகளினால் உண்டாகும் துதி

1 பேதுரு 4:16

ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படு த்தக்கடவன்.


ஒரு விசுவாசியானவன், 'கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக் கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.' அப்படி பாடு பட்டால், தன் அநீதியை நியாயப்படுத்தாதபடிக்கு, அவன் தனக்கு கிடை த்த தண்டனையை ஏற்றக் கொண்டு, தன் ஆவிக்குரிய ஏழ்மை நிலை யை உணர்ந்து, தன் மீறுதலுக்காக துயரமடைந்து, மனந்திரும்ப வேண் டும். அப்பொழுது, அவனுடைய மீறுதல்கள் அவனுக்கு மன்னிக் கப்படும் என்று பரிசுத்த வேதாக மம் கூறுகின்றது. (1 யோவான் 1:9-10). ஆனால், ஒரு விசுவாசி யானவன், 'கிறிஸ்தவனாயிருப்ப தினால் பாடுபட்டால் வெட்கப்ப டாமலிருந்து, அதினிமித்தம் தேவ னை மகிமைப்படுத்தக்கடவன்.' மேற்கத்தைய நாடொன்றிலே, பாலர் பாடசாலைக்கு செல்லும் ஒரு மாணவனை, அவனுடைய பெற்றோர், பேய்தனத்திற்குரிய மேற்கத் தைய கலாச்சார கொண்டங்களிலே பங்கேற்க கூடாது என்று அவனு டைய ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதனால், அந்த மாணவனானவன், அந்த நாளிலே தனித்திருக்க வேண்டியதாயிருந்தது. அவனுடைய சக மாணவ மாணவிகளில் சிலர், அவனை கேலி செய்தார்கள். அந்த மழலை உள்ளம் படைத்த மாணவனுக்கு, தனித்திருப்பது கடினமாக இருந்தது. இந்த உண்மை சம்பவத்தை வாசிக்கும் உங்கள் உள்ளம் எப்படி இருக்கின்றது? ஒன்றுமறியாத அந்த மழலை செல்வத்தை ஏன் இப்படி கடினமான பாதையில் நடத்த வேண்டும் என்று தோன்றுகின்றதா? பாவமறியாத அந்த மழலை செல்வத்தின் உள்ளத்திலே, பேய்தனத்திற்கு அடுத்த காரியங்களை உட்புகுத்துவது, பெரிதான இடறல் என்று தோன்றுகின்றதா? பிரியமானவர்களே, சிலர், சிறிய காரியங்களில் கூட உபத்திவரத்தை சகிக்க மனதில்லாமல், அற்பமான காரியங்களுக்காக விசுவாசத்தை விட்டு விலகிப்போக ஆயத்தமாக இருக்கின்றார்கள். அப்படியானால், கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகள் உண்டாகும் போது, அவர்கள் எப்படி நிலைநிற்பார்கள்? அற்பமான காரியங்கள் உங்கள் மனதை பின்னடையச் செய்யாதிருக்கும்படி எச்சரிக்கையாக இருங்கள். பெரிய காரியமோ, சிறிய காரியமோ, தேவ நீதி உங்களில் நிறைவேற இடங் கொடுங்கள். ஒருவேளை அந்த வழியிலே அவமானங்கள், நிந்தைகள் எதிர்நோக்க வேண்டி வரலாம். அவைகளை சகித்துக் கொள்ள ஆவியானவர்தாமே நம்மை பெலப்படுத்தி நடத்துவார்

ஜெபம்:

அன்பின் தேவனே, கொஞ்சத்திலே உண்மையுள்ளவனாக இருப்பதின் அவசியத்தை உணர்ந்து, எந்த ஒரு காரியத்திலும் நான் பரிசுத்த வாழ்க்கையை சமசரம் செய்யாமல் இருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-2