புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 07, 2025)

நிர்பாக்கியமா? அல்லது பாக்கியமா?

1 பேதுரு 4:14

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்ப ட்டால் பாக்கியவான்கள்;


'ஏன் இந்த நிர்பாக்கியமான வாழ்க்கை எனக்கு? இந்த பாரச் சிலு வையை சுமக்க நான் என்ன பாவம் செய்தேன்;?'என்று விசுவாசிகள் முறுமுறுக்கும் அவலத் தொனியை கேட்டிருக்கின்றீர்களா? ஆம், இப்ப டியான சத்தங்கள் ஆங்காங்கே அவ்வப்போது தொனிக்கின்றது. ஆனால், 'பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்ப டத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.' என்று பரிசுத்த வேதாகமம் கூறும் வண்ணமாக, இவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற உப த்திரங்கள் இரத்தம் சிந்துதலுக்கும், மரணத்திற்கும் ஏதுவானவைகள் அல்லவே. ஆனால், வேறு பிரிக்க ப்பட்ட வாழ்க்கை இன்ன என்பதை அறியாததினாலே, இது தங்களுக்கு ண்டான பாக்கியம் என்று உணராமல், இது ஒரு நிர்பாக்கியமான வாழ்வு என்று அறிக்கை செய்கின்றார்கள். இந்த நாட்களிலே மாத்திரமல்ல, வனந்திரனத்தின் வழியாக மோசேயாவன், தேவ ஜனங்களை வழிநட த்திச் செல்லும் போது, அவர்கள் அநேகந்தரம் முறுமுறுத்து கலகம் பண்ணினார்கள். ஆதி அப்போஸ்தலரின் நாட்களிலும்கூட, தங்களுக் குண்டாயிருக்கின்ற உபத்திரவங்களைக் குறித்த, விசுவாசிகள் குழப்ப டைந்திருந்தார்கள். அதனால், அவர்களுக்கும், எங்களுக்கும் விசுவாச வாழ்க்கையையும், அதிலே நிலைத்திருப்பதின் அவசியத்தையும் குறித்து பேதுரு இவ்வண்ணமாக கூறியிருக்கின்றார். 'பிரியமானவர் களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவ ருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கிய வான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவி யானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷpக்கப்ப டுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். (1 பேதுரு 4:12-14). எனவே, அழைப்பின் மேன்மையை அறிந்து கொள்ளுங்கள். சில காலம் தோன்றி மறையும் உபத்திரங்களைக் கண்டு, விசுவாசத்திற்கு எதிராக வார்த்தை களை பேசாமல், நித்தியம் நித்தியமாய் நிலைத்திருக்கும் பரலோக வீட்டை நினைத்துக் கொள்ளுங்கள். ஆண்டவராகிய இயேசு தாமே, ராஜாதி ராஜாவாக ஆளுகை செய்வார், நாமும், அவருடைய பங்காளி களாக, அவரோடு கூட ஆளுகை செய்வோம். எனவே, விசுவாச வாழ் க்கையானது பாக்கியமுள்ள வாழ்க்கை என்று அறிக்கை செய்யுங்கள்.

ஜெபம்:

பாக்கியம் பெற்ற சந்ததியாய் எங்களை உமக்கென்று வேறு பிரித்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டாகும் நெருகங்களை கண்டு சோர்ந்து பின்னிட்டு போய்விடாதபடிக்கு என்னை காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 112:1-10