தியானம் (மாசி 06, 2025)
பொறுமையோடு ஓடுங்கள்
எபிரெயர் 12:3
ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.
பந்தைய சாலையிலே பரிசு பெறும்படி ஓடுகின்ற வீரர்கள், தங்கள் மேல் சுமைகளை ஏற்றிக் கொள்வதில்லை. மாறாக, பந்தையப் பொ ருளை பெறும்படிக்கு, தங்கள் சீருடையையும், காலணிகளையும் கூட மிகவும் இலகுவாக்கிக் கொள்வார்கள். நமக்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற ஜீவ ஓட்டப் பந்தையம் உண்டு. நாம் ஓடும் பந்தைய சாலையானது, நவீன ஓட்டப்பந்தைய சாலையைப் போல் சமமானதும், பார்வைக்கு நேர்த்தியானதும் அல்ல. கோண லும் மாறுபாடுமான இந்த உலக த்தை கடக்கும்படி ஓடிக் கொண் டிருக்கின்றோம். போகும் வழியிலே, பல பாரங்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றது. பாவங்கள் நம்மை சுற்றி நெருங்கி நிற்கின்றது. நாம் அவை யாவற்றையும் நம்மை விட்டு தள்ளிவிட வேண்டும். 'அன்றி யும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக் தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.' (2 தீமோ 3:12) என்று பரிசுத்த வேதாகமம் முன்னறிவித்தபடி, உலகத்தின் போக்கை பின்பற்றாமல், தேவ நீதியின் வழியிலே நடக்கும் போது, இந்த உலகத்தினால் நமக்கு துன்பங்கள் உண்டாகும். இந்த துன்பங்கள் பல வடிவங்களிலே வருகின்றது. ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களில் நடந்தது போல, இன்றும் சில இடங் களிலே, கிறிஸ்துவின் நிமித்தம், சிலர் அதிகமாய் துன்பப்படுத்தப்படு கின்றார்கள். உபத்திரவங்கள், வியாகுலங்கள், துன்பங்கள், பசி, நிர் வாணம் போன்றவற்றை சகித்தக் கொள்கின்றார்கள். இன்னும் சிலர் hநச மோசங்களை சகித்து, இரத்த சாட்சிகளாக மரிக்கின்றார்கள் என்பதை செய்திகள் வாயிலாக அறிகின்றோம். சில தேசங்களிலே, இன்னும் இப் படியான சூழ்நிலைகள் ஏற்படாவிடினும், பாலர் பாடசாலையிலே இரு ந்து, முதிர்வயதடைந்து மரிக்கும்வரையும், பலவிதமான, மறைமு கமான துன்பங்களுக்கும், எதிர்புகளுக்கும், ஏளனங்களுக்கும் உள்ளாக் கப்படுகின்றார்கள். அந்த வேளைகளிலே, நம்முடைய ஆண்டவராகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள். அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவருடைய நாமத்தினிமித்தம் உபத்;திரவங்களை சகிப்பவர்களுக்கு பரலோக ராஜ்யம் பரிசாக கொடுக்கப்படும்.
ஜெபம்:
நித்திய கன மகிமைக்கென்று என்னை வேறு பிரித்த தேவனே, நீர் தருகின்ற பெலத்தினாலே, உமது நாமத்தினித்தம் உபத்திரவங்களை சகித்து, விசுவாசத்திலே உறுதியாய் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 5:10