தியானம் (மாசி 05, 2025)
தேவ சமாதானத்தை நாடுங்கள்
ரோமர் 10:11
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ராஜ சேவை செய்யும் சில ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, தங்கள் ராஜாவிற்கெதிராக துரோகத்தை செய்து விட்டதால், ராஜ சமுகத்தைவிட்டு ஓடி, மலைகள், குகைகள், காடு களிலே சென்று ஒளித்துக் கொண்டார்கள். சில மாதங்களுக்கு பின்னர், அவர்களில் ஒருவன், தன் வாழ்வின் பரிதாப நிலைமையை உணர்ந்ததால், அவன் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், ராஜா சமுத்திற்கு சென்று, அவர் முன்னிலையிலே சாஷ்டாங்கமாக விழுந்து, தன் குற் றங்களை அறிக்கை செய்து, கண்ணீரோடு, இரக்கத்தை வேண்டி நின்றான். ராஜா கொடுக்கும் நீதி யான தண்டனையை ஏற்றுக்கொ ள்ள தன்னைத் தாழ்த்தினான். அவ னுடைய உண்மையான மனந்திரு ம்புதலைக் கண்ட ராஜா அவனுக்கு மன்னிப்பை வழங்கி, அவனை மறுபடியும் ஏற்றுக் கொண்டான். ராஜாவோடு அவனுக்கு சமாதானம் உண்டாயிற்று. அவனோடு கூட துரோகம் செய்தவர்களில் சிலர், அவ்வண்ணமாக ராஜாவை அணுகி மன்னிப்பை பெற்றுக் கொள்ள வாஞ்சையுள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால், அதை எப்படி செய்வது என்றும், ராஜா அதை ஏற்றுக் கொள்ளவரா என்பதையும் அறியாதிருந்தார்கள். ராஜாவோடு சமாதானத்தை விரும்பாத சிலர், அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள். ராஜா உங்களை கொன்று போடுவார் என்று பயமுறுத்தினார்கள். ஆனால், ராஜாவின் மன்னிப்பை பெற்று, சமாதானத்தை அடைந்த அந்த ஊழியனோ, ராஜாவின் குணாதிசயத்தை அறிந்திருந்ததினால், அதை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்று அவர்களுக்கு அறிவித்தான். பிரியமானவர்களே, ஒருவேளை குற்றங் குறைகளால் சோர்ந்து ஒடுங்கிப் போயிருந்தால் அல்லது அவ்விதமான சூழ்நிலைகளை ஏற்பட்டால், தேவ சமுகத்தை விட்டு ஓடிப் போய்விடாதிருங்கள். நம்முடைய பிதாவாகிய தேவன்தாமே, தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். அப்படியானால், மனம் வருந்துகின்ற தன்னுடைய சொந்தப் பிள்ளைகளுக்கு மனுதுருக்கத்தை காண்பியாதிருப்பாரோ? எனவே, தேவனை அண்டிச் சேருங்கள். குறைகளை மனதார அறிக்கையிடுங்கள். தேவ சமாதானத்தை காத்துக் கொள்ளுங்கள். அவரை அண்டிச் சேருகின்ற ஒருவரும், வெட்கப்பட்டுப் போவதில்லை.
ஜெபம்:
மனதுருக்கமுள்ள பிதாவாகிய தேவனே, நான் உமக்கெதிராக செய்த குற்றங்களை எனக்கு மன்னித்து, இரட்சிப்பின் சந்தோஷம் என்னில் நிலைத்திருக்க எனக்கு இரக்கம் காண்பிப்பீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - ரோமர் 12:18