புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 04, 2025)

சமாதானம் செய்கின்றவர்கள்

மத்தேயு 5:9

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.


விசுவாச மார்க்கத்தார், சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களாக காணப்பட வேண்டும். தன் ஆத்துமாவின் ஏழ்மை நிலையை உணராதவன், எப்படியாக இரட்சிப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்வான். இரட்சிப்பின் அவசியத்தை உணராதவன், எப்படி தன் பாவங்களைக் குறித்து மனம் வருந்துவான்? இரட்சிப்பை பெற்றுக் கொள்ளாவனுக்கும் தேவனுக்கும் சம்பந்தம் ஏது? நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தபம் ஏது? எப்படி அவனுடைய வாழ்விலே தேவ குணா திசயங்களாகிய சாந்தகுணம், தேவ நீதி, இரக்கம் நிலைகொண்டிருக்க முடி யும்? ஒருவன் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்க முடியாத சிந்தப்பட்ட இரத்தத்தினாலே கழுப்படா விட்டால், அவன் இருதயம் எப்படி சுத்தமாக்கபட முடியும்? 'நான் மெய் யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும் படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். நான் உங்களுக்குச் சொன்ன உப தேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். 'நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னை யல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ருவன் என்னில் நிலை த்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியு ண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினி யிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.' அப்பா பிதாவே என்று கூப்பிடும் புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்ற தேவ பிள்ளைகளே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் இருந்த அந்த தூய ஆவியா னவர் ஒருவனில் நிலைத்திருந்தால், அங்கே தேவ சமாதானம் உண்டா யிருக்கும். அத்தோடு யாவும் நிறைவு பெறுவதில்லை. தேவ சமாதானம் தங்கியிருந்தால், தேவ புத்திரர்களாகிய அவர்கள், தேவனுக்கேற்றவை களை சிந்திப்பார்கள். தேவனுக்கேற்றவைகளை நடப்பிப்பார்கள். அவ ர்கள் ஒப்புரவாகுதலின் ஊழியத்தை பெற்றவ தேவ குமாரரும் குமாரத் திகளுமாயிருப்பார்கள். தேவனுடைய பிள்ளைகளாகிய அவர்கள் சமாதானம் செய்கின்றவர்களாக காணப்படுவார்கள். இது தேவ பிள்ளையாக இருப்பதற்குரிய தகைமையயல்ல,மாறாக இந்து தேவ பிள்ளையினுடைய சுபாவமாக இருக்கின்றது.

ஜெபம்:

அப்பா பிதாவே என்று அழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை எனக்கு தந்த தேவனே, என்னுடைய அழைப்பின் நோக்கத்தை நிறை வேற்ற உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:4-6

Category Tags: