தியானம் (மாசி 03, 2025)
பிரிவினைகளை ஆதரிக்கின்றவர்கள்
யோவான் 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்;
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவனுக்கு, பிறப்பிலே பெற்றோர் தனக்கு வைத்த பெயரை மாற்றி, தயாளன் என்று தன் பெயரை சட்டபூர்வமாக பதிவு செய்து கொண்டான். ஆனால், தயாள குணத்திற்கும் அவனுக்கும் எந்த சம்பந்ததும் இல்லாதிருந்தது. இப்படியாக பெயரை மாற்றும் உரிமையானது தேசத்திலுள்ள குடிமக்கள் யாவருக்கும் இருந்தது. ஒருவன் எந்தப் பெயரை சொல்லியும் தன்னை அழைக்கலாம் ஆனால், அவனுடைய உள் ளான மனிதனுக்கும் அந்த பெயரு க்கும் சம்பந்தம் இருக்கின்றதா என்பது கேள்விக்குரியதாக இருக்கும். ஒரு விசுவாசியானவன், 'நான் இரட்சிப்ப டைந்தவன், நான் கிறிஸ்தவன், நான் எப்போதும் தேவனோடிருக்கின்றேன்' என்று ஒருவன் தன்னை கூறிக் கொள் ளலாம். ஆனால், அவனுக்கும் கிறிஸ்துவுக்கும் சம்பந்தம் இருந்தால் விசுவாசி என்னும் பதம் அவன் வாழ்விலே கருத்துள்ளதாக இருக்கும். தேவனை நேசி, பிறனை நேசி என்று கற்பனைகளின் சுருக்கத்தை ஆண்டவராகிய இயேசு கற்றுக் கொடுத்தார். உண்மையாக தேவனை நேசிப்பவனுடைய வாழ்விலே, தேவனுடைய வார்த்தை நிலைத்திரு க்கும். அப்படி நிலைத்தருக்கதால் அவன் தன் பிறனை உண்மையாக நேசிப்பான். தேவனை நேசிக்காதவன், தன் பிறனை நேசிக்கின்றேன் என்று கூறிக்கொள்ளலாம், ஆனால் அந்த நேசமானது கருதற்றதாக இருக்கும். அது போலவே, நான் தேவனோடு சமாதானமாக இருக்கின்றேன் என்று கூறியும், பிரிவினைகளுக்கு ஆதரித்து வந்தால். அவன் தேவனுடைய சமாதானத்தை இன்னுமாய் அறியவில்லையென்பது பொருளாகும். நாம் மற்றவர்கள் மத்தியிலே சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால், அதை உலக முறைமையின்படி செய்தால், அவை தற்காலிகமானதாக இருக்கும். பின்நிலைமை அதிக குழப்பமுள்ளதாக இருக்கும். ஆண்டவராகிய இயேசுதாமே, இந்த உலகம் தருகின்ற பிரகாரமாக சமாதானத்தை தருவதில்லை. அவர் தம்முடைய சமாதானத்தை நமக்கு தந்தார். அவைகள் சூழ்நிலைகளோடு மாற்றமடைவதில்லை. எனவே உங்கள் உள்ளந்தரியங்களை ஆராய்ந்து அறியுங்கள். நீங்கள் விசுவாசிகள் மத்தியிலே பிரிவினைகளை எந்த விதத்திலும் ஆதரிக்கின்றவர்களாக இருந்தால், உங்களில் தேவ சமாதானம் நிலைத்திருக்கின்றது என்று கூறிக் கொள்ள முடியாது.
ஜெபம்:
பொய் சாட்சிகளையும், பிரிவினை உண்டாக்கின்றவர்களையும் அருவருக்கின்ற தேவனே, உம்முடைய சமாதானத்திலே நிலைத்திருக்கும் கனிகளை என் வாழ்வில் காண்பிக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - லூக்கா 19:42