தியானம் (மாசி 02, 2025)
கிறிஸ்துவின் சாயலிலே வளருங்கள்
ரோமர் 10:15
சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துதாமே, அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; (ரோமர் 8:29). எனவே நாம் பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப் பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொ ண்டிருக்கின்றோம். (கொலோ 3:10) கிறிஸ்துவின் சாயலிலே வளருவதெ ன்பதன் பொருள் என்ன? இந்த பூமி யிலே அவர் வாழ்ந்து காட்டிய வழி யிலே வாழ வேண்டும். அவர் இந்த பூவுலகிற்கு வந்த நோக்கத்தை நாம் அறிந்த கொள்ள வேண்டும். இழந்து போனதைத் தேடவும் இரட் சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கின்றார் என்று ஆண்டவராகிய இயேசு தம்மைக் குறித்து கூறியிருக்கின்றார். மனித குலத்திற்கு இரட் சிப்பு அவராலே மாத்திரம் உண்டாகின்றது. அவரைத் தவிர வேறு வழி யில்லை. அவர் வழியாகவே, மனிதர்கள் பரலோகத்தோடு ஒப்புரவா க்கப்பட்டு, சமாதானத்தை கண்டடைய முடியும். தேவனுடைய குமார்க ளாகவும், குமாரத்திகளாவும் அழைக்கப்பட்ட நாம், அந்த சமாதானத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். யார் அந்த மற்றவர்கள்? ஆயிரக்கணக்கான மைகளுக்கு அப்பாலே இருக்கின்றவர் களா? உகலறியா ஊர்களிலும், குக்கிராமங்களிலும் இருக்கும் பாமர மக்களுக்கு மாத்திரமா? இல்லை, முதலாவதாக, நாம் அனுதினதும் நம் மோடு இடைப்படும், சக மாணவர்கள், வேலை செய்பவர்கள், அயல வர்கள் அவர்களுக்கு அந்த சமாதானத்தின் நற்செய்தியை நாம் அறி விக்க வேண்டும். அறிவிப்பதென்பதன் பொருள் என்ன? நற்செய்தியை பிரசங்கிப்பதா? துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதா? அவைக ளுக்கு முன்னதாக, நம்டைய வாழ்க்கையானது நம்மோடு வாழ்பவர்கள் மத்தியிலே கிறிஸ்துவை பிரதிபலிக்க வேண்டும். கிறிஸ்துவின் சாட்சிகளாவும், நடமாடும் நிரூபங்களாகவும் காணப்பட வேண்டும். மற்றவர்கள் அதைக் கண்டு பரம பிதாவை மகிமைப் படுத்த வேண்டும். ஒருவனுடைய வாழ்விலே தேவனோடுள்ள சமாதானம் தங்கியிருந் தால், அவன் கிறிஸ்துவை தரித்தவனாக அவருடைய சமாதானத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
ஜெபம்:
பரலோக தேவனே, நான் பெற்றுக் கொண்ட சமாதானத்தின் நற்செய்தியை, கிடைக்கும் சந்தர்பங்களிளெல்லாம், என் வாழ்வினாலும், வாயினாலும், அறிவிக்கின்ற உணர்வுள்ள வாழ்க்கை வாழ வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்காக 19:10