புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 01, 2025)

தேவனுடைய புத்திரர்கள்

கொலோசெயர் 1:20

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி,


பிதாவாகிய தேவனுக்கு ஒரோ பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துக்கு சமாதான பிரபு என்ற காரணப் பெயர் உண்டு. அவர் பூலோக த்திற்கும் பரலோகத்திற்கும் இடையிலே சமாதானத்தை உண்டு பண்ணும் பொருட்டு, அவர் இந்த பூவுலகிற்கு வந்தார். 'அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம் பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்ட திட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக் கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.' (எபேசியர் 2:12-17) இந்த சமாதானத்தை தேவ குமாரனாலே மட்டுமே உண்டு பண்ண முடியும். இந்த சமாதானத்தை அவர் எப்படி உண்டு பண்ணினார்? அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள் ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. (கொலோசேயர் 1:20). சுமா தானத்தை உண்டு பண்ணும் பொருட்டு, அவர் தம்முடைய உயிரையே தியாகம் செய்தார். அவர் வழியாக தேவனுடைய பிள்ளைகள் என்ற தகுதியைப் பெற்ற நாமும், அந்த பெயருக்கு ஏற்றபடி சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும். தேவனை அறியாதவர்களை தேவனோடு சேர்க்கின்றவர்களாகவும், பகைமையிலே வாழும் மனிதர்களை நமக்கு கொடுக்கப்பட்ட அளவின்படி ஒப்புரவாக்கின்றவர்களாகவும், பிரிவினைகள் அகன்று ஒருமனம் உண்டாகும்படி எப்போதும் ஜெபிக்கின்றவர்ளா கவும் காணப்பட வேண்டும். அதை நிறைவேற்றுவதற்கு சில வேளை களிலே கிரயம் கொடுக்கப்பட வேண்டும். அப்பொழுது நாம் தேவனுடைய புத்திரர்களாக காணப்படுவோம்.

ஜெபம்:

என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொண்ட தேவனே, நானும் அந்த மனநிலையுடையவனாக, உம்மை அறியாதவர்களை உம்மிடம் சேர்க்கின்றவனாக வாழும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ஏசாயா 9:6