தியானம் (தை 31, 2025)
இருதயத்தைக் காத்துக் கொள்
நீதிமொழிகள் 4:23
எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்இ அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
'எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.' (எரேமியா 17:9-10) என்று தேவனாகிய கர்த்தர் கூறியிருக்கின்றார். மேலும், கர் த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, தம்மை பின்பற்றி வந்த சீஷர்களை நோக்கி: எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல் லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய் ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். அவைகளே மனுஷனை தீட்டுப்படுத்தும் என்று கூறியிருக்கின்றார். எனவே நாம் இந்த வார்த்தை களைக் குறித்து விழிப்புணர்வுள்ளவர்களாக வாழ வேண்டும். நாமோ, கர்த்தருடைய சமுகத்திற்கு செல்லும் போது, நம்முடைய கிரியைகளை யும், செயல்களையும், சாதனைகளையும் விபரித்து, நம்முடைய இருதயத்தை ஒருபோதும் கடினப்படுத்தாத படிக்கு, அவருடைய சமுகத்திலே நம்மை தாழ்த்தகின்றவர்களாக காணப்பட வேண்டும். தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும் என்று தாவீது ராஜாவைப் போல நாமும் மனதார அறிக்கை செய்ய வேண்டும். கிறிஸ்துவோடு வாழும் வாழ்க்கை, உள்ளான மனுஷன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படும் வாழ்க்கை. மறுரூபமாக்கப்படும் வாழ்க்கை. ஒன்றான மெய்த் தேவனாகிய பிதாவையும், அவருடைய திருக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிக்கின்ற அறிவிலே வளர்ந்து பெருகும் வாழ்க்கை. எனவே, நித்திய ஜீவனைக் கொடுக்கும் ஜீவ வார்த்தை களால் நாம் நம்முடைய வாழ்க்கையை காத்துக் கொள்ள வேண்டும். அவைகளே, நமக்கு எல்லையை காண்பிக்கின்றது. அவைகளே நம்முடைய காவல். தேவ வார்த்தைக்குள் வாழ்வதே நம்முடைய அரணான பட்டணம். நம்முடைய பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே எங்கள் இருதயமும் இருக்கும். எனவே, எங்கள் இருதயமானது வாழ்வு தரும் வார்த்தையை பற்றியிருப்பதாக. அப்போது, அங்கிருந்து ஜீவ ஊற்றானது புறப்பட்டு வரும்.
ஜெபம்:
என் உள்ளந்தரியங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, என் வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானங்களும், உமது சமுகத் திலே ஏற்புடையதாக இருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக் கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 139:1-24