புதிய நாளுக்குள்..

தியானம் (தை 30, 2025)

சுத்த இருதயம்

சங்கீதம் 51:10

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.


ஈசாயின் குமானாகிய தாவீது என் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டேன் என்று தேவனாகிய கர்த்தர் தாமே தாவீதைக் குறித்து சாட்சி கொடுத்தார் (1 சாமு 13:14, அப் 13:22). தாவீது. சமஸ்த இஸ்ரவே லுக்கும் ராஜாவாக இருந்த போதும், அவன் தன் இருதயத்திலே தன் ஆவிக்குரிய ஏழ்மை நிலையை உணர்ந்தவனாக இருந்தான். தேவ னுடைய சமுத்திற்கு செல்லும் போது, தன்னை ஒரு பொருட்டு என்று எண்ணாமல், தன்னைத் தாழ்த்தி, தன்னிடத்தில் நன்மை ஏதும் இல்லை என்று தன்னை முற்றிலுமாய் அவருடைய பாதத் திலே அர்ப்பணிக்கும் மனதுடைய வனாக இருந்து வந்தான். ஒரு சமயம், அவன் மகா பெரும் பாதகத்தை, தேவனுக்கு விரோதமாகவும், தன் சக ஊழியனுக்கு விரோதமாவும் செய்து. அந்த தவறை மறை ப்பதற்கு, சூழ்ச்சி செய்தான். அவை ஒன்றும் வாய்க்காமல் போயிற்று. அந்நாட்களிலே, தன் குற்றத்தை மூடி மறைக்கும்படிக்கு அவன் இருத யத்திலே வஞ்சனையான எண்ணங்களுக்கு இடம் கொடுத்திருந்தான். அந்த வேளையிலே, தேவனாகிய கர்த்தருடைய தீர்க்கதரியானவன், தாவீது செய்த மகா பெரிய பாதகத்தை வெளிப்படுத்தினான். அந்த கணப்பொழுதிலே, தாவீது தன் பரிதாபமாக நிலைமைய உணர்ந்து கொண்டான். தேவனுடைய சமுகத்திலே தன்னைத் தாழ்த்தி, தன் குற்றங்களுக்காக மிகவும் துயரப்பட்டான். அவன் ராஜாவாகிய சவுலி னால் துன்படுத்தப்படும் நாட்களிலே, தன் புயபெலத்தை காண்பிக் காமலும், முகஸ்துதி செய்யாமலும், மற்றவர்கள் மேல் இரக்கத்தை காண்பித்து தேவ நீதி நிறைவேறும்படி நீடிய பொறுமையுள்ளவான இருந்ததினாலே, அவனுடைய சுபாவங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அவன் தன் பாவத்தை உணர்ந்து, உள்ளத்தில் உண்மையை விரும்பும் தேவனைநோக்கி: தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும் என்று வேண்டுதல் செய்தான். அவன் தேவ இரக்கத்தைப் பெற்றான். அவனுடைய சந்ததியிலே பூமி யை அரசாளும் ராஜாதி ராஜா பிறந்தார். எனவே, நம்முடைய வாழ்விலே இருதயத்திலே வஞ்சனை உண்டு என்று அறியும் போது, வேதனை உண்டாக்கும் வழிகளைவிட்டு திரும்பி, நாம் தேவனுடைய பாதத்திலே நம்மை தாழ்த வேண்டும்.

ஜெபம்:

உள்ளத்தில் உண்மையிருக்க விரும்பும் தேவனே, எந்த வஞ்சனையான செயல்களும், என் இருதயத்திலே குடிகொள்ள நான் இடங் கொடுக்காமல் இருக்க எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - வெளிப்படுத்தல் 2:5