தியானம் (தை 29, 2025)
கலப்பில்லாத வாழ்க்கை
ஏசாயா 1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரியானவள், தன் நாயகனுக்கு துரோகம் செய்யும் போது, அந்த விவாக மஞ்சம் அசுத்தமுள்ளதாக இருக்கும். அவள் தன்னை மோக பாவத்திற்கு ஒப்புக் கொடுக்கும் இரு தயமுள்ளவளாக மாறிவிடுகின்றாள். இவ்வண்ணமாகவே, தேவனாகிய கர்த்தரை தங்கள் தெய்வமாக கொண்ட ஜனங்கள், அவருக்கு துரோகம் செய்து, வேறு தேவர்கள் என்று அழைக்கப்படும் மாயைக்கு தங் களை ஒப்புக் கொடுக்கும் போது, அவர்கள் தங்கள் பரிசுத்த உற வை வேசித்தனத்துக்குள்ளாக்கி கொள்கின்றார்கள். உண்மையு ள்ள நகரம் எப்படி வேசியாய் போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடி கொண்டிருந்தது: இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர் (ஏசாயா 1:21) என்று தேவனாகிய கர்த்தர்தாமே தம்முடைய ஜனங்க ளுடைய பின்மாற்றமான இருதயத்தைக் குறித்து கூறியிருக்கின்றார். வெள்ளி தன் நிலையிருந்து களிம்பாக மாறிப் போகும் போது, அது இனி வெள்ளி என்று அழைகப்படுவதில்லை. அதுபோலவே, சுத்திகரி கப்பட்ட நிலையிலிருந்து விலகிப்போகும் விசுவாசியும், தள்ளுபடியாக வெள்ளியை போல ஆகிவிடுவார்கள் (எரேமியா 6:30). சுவையான திராட்சை இரசத்திலே தண்ணீரை கலந்துவிட்டால், அது இனி திராட்சை இரசம் என்று அழைக்கப்படாமல் தண்ணீர்கலப்பானது என்று அழைக்க ப்படும். தங்களை அழைத்த நாயகனாகிய கர்த்தருக்கு துரோகம் செய்கி ன்றவர்கள், தங்கள் இருதயத்தை திருக்குள்ளதாக மாற்றிவிடு கின்றார்கள். 'நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படு வீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடை வீர்கள்.' என்று கர்த்தர் கூறியிருக்கின்றார். இவர்கள் ஆதி அன்பிற்கு திரும்ப வேண்டும். எங்கே விழுந்தார்கள் என்று அறிந்து கொண்டு, தங் கள் ஆவிக்குரிய பரிதாபமான ஏழ்மையான நிலைமைய உணர்ந்து, தங் கள் துரோகளுக்காக துயரப்பட வேண்டும். தேவ சித்தமானது, தேவ னுடைய திட்டப்படி தங்கள் வாழ்விலே நிறைவேற இடங் கொடுத்து, சுய நீதியை களைந்து விட்டு, தேவனுடைய நீதி நிறைவேற வாஞ்சிக்க வேண் டும். தங்கள் இருதயங்களை மற்றவர்களுடைய குறைவிலே கடினப்ப டுத்தாமல், மாயமற்ற இரக்கத்ரதை மற்றவர்களுக்கு காண்பிக்க வேண் டும். தேவனோடுள்ள உறவிலே சுத்தமுள்ளவர்களாக மாற வேண்டும்.
ஜெபம்:
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மை யைப் புசிப்பீர்கள் என்று கூறிய தேவனே, நான் எப்போதும் என் உண்மை நிலையை உணர்ந்து உம்மிடமாய் திரும்பும் இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 73:1