தியானம் (தை 28, 2025)
தேவனை தரிசிப்பவர்கள்
மத்தேயு 5:8
இருதயத்தில் சுத்தமுள்ளவர் கள் பாக்கியவான்கள்; அவர் கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
ஒரு ஊரிலே திருமணமாகிய இளம் தம்பதிகள், ஒருவரை ஒருவர் நேசி த்து, விட்டுக் கொடுத்து, கணவன் மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். ஆண்டுகள் கடந்து சென்றபோது, சில நேரங்களிலே, ஒரு சில காரியங்களிலே கருத்து முரண்பாடுகள் அவ்வவ்போது ஏற்பட்டது. அந்த வேளைகளிலே, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அறியும் அறிவிலே வளர்ந்து வரும்படிக்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண் டியதாயிருந்தது. ஆனால், தங்கள் விவாகத்தை குறித்து எந்த சந் தேகமோ, மாற்றுக் கருத்தோ அவ ர்கள் மனதிலே எழுந்ததில்லை. கடந்து வந்ததோ பாதி வழி, இன்னும் அநேக ஆண்டுகள் ஒன்றாக வாழ வேண்டும். இந்த உலகிலே, அவர்கள் பல சவால்களை எதிர் நோக்க வேண்டியிருக்கலாம். ஆனால், அவர்கள் மத்தியிலே கணவன் மனைவி என்ற உறவிலே சுத்தம் இருந்தது. அந்த உறவிலே மாயை இருந்ததில்லை. ஒழிவு மறைவாக வாழ்க்கை அவர்கள் மத்தியிலே இல்லை. கிறிஸ்து இயேசுவின் மணவாட்டியாக அழைக்கப்பட்ட சகோ தர சகோதரிகளே, தேவ ஊழியராகிய பவுல் தாமே, நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்பு க்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன் என்று கொரிந்து சபையிருள்ளவர்க ளுக்கு கூறியிருக்கின்றார். அதாவாது, ஒரு விசுவாசியினுடைய ஆவி க்குரிய வாழ்கையிலே அந்த விசுவாசிக்கும் தேவனாகிய கர்த்தருக்கும் இடையிலே ஒரு மூன்றாம் நபர் அல்லது பொருள் வரும் போது, அந்த உறவு மாசுபட்டு போய்விடுகின்றது. விபச்சாரத்திற்கு ஒத்த விக்கிரக ஆராதனை அந்த உறவிலே உண்டாகின்றது. அந்த விவாசியின் வாழ் விலே, விசுவாசி என்னும் சொல் அர்தமற்றதாக மாறிப்போய் விடுகி ன்றது. கற்புள்ள மணவாட்டி என்ற பதம் மாசுபட்டு போய்விடுகின்றது. முழு இருதயத்தோடு தேவனை சேவிக்க முடியாது. அந்த இருதயத் திலே சுத்தம் இல்லை. எனவே மாயை உங்களை விட்டு அகற்றுங்கள். சத்தியத்திலே நிலைத்திருங்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியி னாலே சோதிக்கப்பட்;டு சுத்தமாக்கப்படுவதுபோல, நம்முடைய விசு வாசம் சோதிக்கப்பட்டு நம் சிந்தையும் இருதயமும் சுத்தமாக்கப்படும். இருதயத்திலே சுத்தமுள்ளவர்கள், தற்போது தங்கள் விசுவாச கண்களிககாலே தேவனை தரிசிக்கின்றார்கள். அவர் வெளிப்படும் போது, நாமும் மறுரூமடைந்து என்றென்றும் அவரை முகமுகமாக தரிசிப்பார்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, எனக்கும் உமக்கும் இடையிலே எந்த ஒரு விக்கிரகமும் வந்து மாயம் பண்ணாதபடிக்கு, உமக்கு முன்பாக எப்போதும் உத்தமனாய் நடந்து, மனதார சத்தியத்தை பேச கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 யோவான் 3:2