தியானம் (தை 27, 2025)
இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து...
சங்கீதம் 24:5
அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
தன் தகப்பனாவரின் பண்ணையிலே வேலை பார்த்து வந்த இளவயதிலுள்ள குமாரனானவன், பண்ணையிலே அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையொன்றை குறித்த நேரத்திலே செய்யாமல் போனதினாலே, மந்தையிலே சில ஆடுகள் வருதமுற்றது. பண்ணையின் ஊழியர்கள், ஆடுகளின் நிலைமையை பண்ணையின் எஜமானிடத்திலே அறிவித் தார்கள். எஜமானானவன் விரைந்து சென்று காரியத்தை விசாரித்தார். பண்ணையிலிருந்த ஊழியர்கள்மேல் அவர் கோபமநை;தார். அந்த வேளை யிலே அங்கு வந்த குமாரனானவன், பண்ணையின் ஊழியரின் முன்னி லையிலே, எஜமானானகிய தன் தகப் பனானவரிடம், நடந்த சம்பவத்தில் எதையும் ஒழித்து மறைக்காமல், உள் ளத்தில் உள்ளபடி கூறினான். தனக்கும் தன் தகப்பனானவரின் உறவு க்கும் இடையிலே எந்த சிறிதான காரியமும் நிற்கக்கூடாது என்ற எண் ணமுடையவனாக இருந்த அந்த குமாரனானவன், தனக்கிருந்த குமார னுக்குரிய உரிமையையும சலுகைகளையும் நன்கு அறிந்திருந்தும், ஊழி யர்கள் முன்னிலையிலும் கபடாய் நடந்து கொள்ளாமல், உண்மையை கூறினான். அநேக ஆண்டுகளாக, அந்த எஜமானனாவனுக்கு ஊழியம் செய்து வந்த மூத்த ஊழியர்களும், அந்த குமாரனுடைய மாசில்வாத இருதயத்தை கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தார்கள். மேலும், அவன் தன் தகப்பனானவனை நோக்கி: நான் இனிமேல் இப்படியான குற்ற ங்களை செய்ய மாட்டேன் என்று உறுதியாய் கூறிக் கொண்டான். தன் னுடைய குமாரனானவன், வாலிபனாக இருக்கின்றான். இது அவனு டைய முதலாவது குற்றம் என்றும், அதனால், இது கடைசியான குற்றமு மாக இருக்காது என்று அறிந்திருந்தார். ஆனாலும், அவன் தன் இருத யத்திலே சுத்தமுள்ளவனாக இருப்பதை கண்டு மனதிலே தன் குமார னைக் குறித்து பெருமிதமடைந்தார். பிரியமான சகோதர சகோதரி களி லே, நாம் இருதயத்திலே சுத்தமாக இருப்பது என்பது முற்றிலும் பாவ மில்லாத, சம்பூரண பரிசுத்த வாழ்வு என்பது பொருளல்ல. ஒரு விசுவா சியாவன், இந்த உலகத்திலே வாழும்வரை அவனிடத்திலே குறைகள் உண்டாகக் கூடிய சாத்தியம் உண்டு. அதே நேரத்திலே, அவன் தனக் கும் தன் தேவானாகிய கர்த்தருக்கும் இடையிலே எதுவும் குறுக்கிடால், தன் இருதயத்திலே சுத்தமுள்ளவனாகவும், மற்றவர்கள் முன்னிலை யிலே நேர்மையாய் நடந்து கொள்கின்றவனாகவும் வாழ முடிவும்.
ஜெபம்:
சுத்த இருதயத்தை விரும்பும் தேவனே, என் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 15:1-5