புதிய நாளுக்குள்..

தியானம் (தை 26, 2025)

நீங்கள் வைத்திருக்கும் அளவுகோல்

யாக்கோபு 2:13

ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.


ஒரு குடும்பத்திலே இருந்த மூத்த குமாரனானவன், தான் செய்த குற்றத்தை மன்னிக்கும்படி, தன் தந்தையை இரந்து கேட்டு, மன்னிப்பை பெற்றுக் கொண்டான். சில மாதங்களுக்க பின், அவனுடைய தம்பி யானவன், வேறறொரு குற்றத்திலே அகப்பட்டான். தன் தமையனைப் போல அவனும் மனம் வருந்தினான். தன்னை மன்னித்துவிடும்படி, தன் தந் தையை வருந்திக் கேட்டான். ஆனால், தமையனானவவோ, தன் தந்தையா னவர், தன் தம்பிக்கு அவன் குற்ற த்தை மன்னிக்க முன்னதாக, அவனு க்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். அவனுக்குரிய தண்டனையை வழ ங்க வேண்டும் என்று மனக் கடின மு ள்ளவனாக இருந்தான். அந்த தமை யனைப் போல கடின மனதுள்ளவ ர்களை எப்படி சொல்வது? அவன், தனக்கொரு ஒரு நீதியும், தன் தம்பிக்கு இன்னுமொரு நீதியையும் வைத்திருந்தான். இப்படிப்பட்டவர் களினடம் தேவ நீதி நிறைவேற வேண்டும் என்ற எண்ணமில்லை. இவர்கள் இருதயம் கடிப்பட்டிருப்பதால், இப்படிப்பட்டவர்களுக்குள், தங்கள் நிலைiயை குறித்த பெருமை ஆளுகை செய்யத் ஆரம்பித்து விடுகின்றது. இவர்களின் உள்ளத்திலே, தேவ சித்தம் நிறைவேற வேண்டும் என்னும் மனதில்லாமல், தேவ சித்தமானது தங்கள் விருப் பப்படி நிறைவேற வேண்டும் என்ற மனதுள்ளவர்ளாக காணப்படு வார்கள். உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன் புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை இவர்கள் நிறைவேற்றுவதில்லை. தங்களுக்கு ஒரு அளவுகோ லும், மற்றவர்களுக்கு இன்னுமொரு அளவுகோலையும் வைத்திருப்ப தால், பட்சபாதமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். பிரிமானவர்களே, தேவ னுடைய இரக்கத்தை அசட்டை செய்யாதிருங்கள். ஒருவனுக்கு உங்கள் இரக்கத்தை காண்பிக்க தகுந்த சந்தர்ப்பம் ஏற்படும்போது, உங்கள் இரு தயமானது, தீமைக்கு தீமையை நடப்பிக்க வேண்டும் என்று கடினமுள்ளதாக இருந்தால், சிலுவையண்டைக்கு திரும்புங்கள். உங்கள் ஆவிக்குரிய பரிதாப நிலைiயை உணர்ந்தவர்களாக, மனதிலே மறை ந்திருக்கும் அருவருப்புக்களை தேவனிடம் அறிக்கையிடு ங்கள். அவர் மன்னிக்க தயை பெருத்தவராக இருக்கின்றார். எந்த அளவுகோலால் மற்றவர்களை நீங்கள் அளக்கின்றீர்களோ, அந்த அளவுகோலால் உங்களுக்கும் அளக்கப்படும்.

ஜெபம்:

மனதுருக்கமுள்ள தேவனே, நான் உம்மிடம் பெற்றுக் கொண்டிருக்க இரக்கத்தை அசட்டை செய்யாமல், மற்றவர்களும் அதே இரக்கதை பெற வேண்டும் என்ற உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:2