தியானம் (தை 25, 2025)
இரக்கமற்ற ஊழியன்
மத்தேயு 15:35
நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
எனக்கு எதிராக குற்றம் செய்தவனுக்கு இரக்கமல்ல, தண்டனையே கிடைக்க வேண்டும் என்பது மனிதர்களின் பொதுவான எண்ணம். ஆனால், ஆண்டவர் இயேசுவோ, கணக்கு பார்க்காமல் மன்னிக்கும்படி ஏன் கூறினார்? ஒருவன் பல தலைமுறைகள் வாழ்ந்தாலும், செலுத்தி தீர்க்கமுடியாத அளவிற்கு, தன் எஜமானனாகிய ராஜாவினிடத்தில் கடன் பட்டிருந்தான். கடனை செலுத்தும் நாள் வந்த போது, கடனை செலுத்தி தீர்ப்பதற்கு அவனிடத்தில் ஒன்றும் இல்லாதிருந்தது. அப்பொழுது ராஜா அவனை நோக்கி: உனக்குண்டான எல்லாவற்றையும், உன் மனனைவி பிள்ளைகiளும் விற்று கடனை தீர்த்து கொள் என்று கட்டளையிட்டார். அவனோ ராஜாவின் சமுகத்திலே தாழ விழு ந்து, தனக்கு இரங்கும்படி கேட்டுக் கொண்டான். மனதுருக்கிய ராஜா, தண்டனையோ, தவணையோ ஏதுமில்லாமல், அவனுடைய கடனை அவனுக்கு மன்னித்து விட்டார். பெரு குற்றத்திலிருந்து மன்னிப்பை பெற்ற அந்த ஊழியக்காரன், புறப்பட்டு போகையில், தன்னிடம் சிறிய கடன்பட்ட தன்னுடைய வேலைக்காரனொருவனை சந்தித்தான். அவ னைப்பிடித்து, தொண்டையை நெரித்து, நீ பட்ட கடனை தீர்க்க வேண்டும் என்றான். அந்த வேலைக்காரம் அவன் காலிலே விழுந்து, கால அவகாசம் தரும்படி இரக்கத்திற்காக வேண்டிக் கொண்டான். அவனோ, அதைக் கேளாமல், அவனை காவலிலே வைத்தான். இந்த சம்பவத்தை கேட்ட ராஜா, அந்த இரக்கமற்ற மனதுள்ள, பொல்லாத ஊழியனை பிடி த்து, அவன் கடனை அவன் தீர்த்து முடிக்குமட்டும் உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக் கொடுத்தான். பல தலைமுறைகள் வாழ்ந்தாலும் கொடுக்க முடியாத கடனை அவன் காவலிலே இருந்து எப்படி செலுத்த முடியும்? ராஜாவின் கோபத்திற்கு யார் எதிர்த்து நிற்க கூடும். எனவே, நித்திய நரக ஆக்கினைக்கு பாத்திராராக இருந்த நம்முடைய பாவங் களை நமக்கு அவர் மன்னித்திருக்க, நாம் மற்றவர்களுடைய குற்றங்களுக்கு தண்டனையை வழங்கினால், நம்முடைய நீதியுள்ள தேவன் என்ன செய்வார்? எனவே, மனதுருகுங்கள், மனம் இரங்குங்கள். ஒருதர மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும், நம்முடைய பெலவீனங்களை கண்டு, தேவன் நம்மை தண்டிக்காமல், தம்முடைய இரக்கத்தை காண்பிக்கி ன்றார். அதுபோல, நாமும் நம்முடைய இரக்கத்தை மற்றவர்களுக்கு காண்பிப்போமாக.
ஜெபம்:
என்னுடைய மீறுதலுக்கு தக்கதாய் எனக்கு தண்டனை வழங்காதிருக்கும் தேவனே, நான் அனுதினமும் உம்மிடமிருந்து பெறும் இரக்கத்தை மற்றவர்களுக்கு காண்பிக்கும் நன்றியுள்ள இருதயத்தை எனக்கு தந்த வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 103:8-10