தியானம் (தை 24, 2025)
எத்தனை முறை மன்னிப்பது?
மத்தேயு 18:21
ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட் டான்.
நம்முடைய ஆண்டவராகிய இயேசு தாமே, இரக்கம் என்றால் என்ன என்று தம்முடைய சீஷர்களுக்கு உவமைகள் வாயிலாக கற்றுக் கொடு த்தார். அது மாத்திரமல்ல, அவர் கற்றுக் கொடுத்தவைகளை சம்பூர ணமாக தம்முடைய வாழ்க்கையிலே நிறைவேற்றி முடித்து, என்றெ ன்றுமாய் இரகத்தில் ஐசுவரியமுள்ளவராகவே இருக்கின்றார். ஒரு சம யம், அவருடைய பிரதான சீஷ னாகிய பேதுரு ஆண்டவர் இயேசு இடத்திலே வந்து, என் சகோதரன் எனக்கு விரோதமா ய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்க வேண்டும். ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். இந்த சம்ப வதிலே, பேதுரு கூறியதை சற்று கவனித்துப் பாருங்கள். என க்கு விரோதமாக குற்றம் செய்திருந்தால் என்று கூறாமல், எனக்கு விரோ தமாக குற்றஞ் 'செய்து வந்தால்' என்று தொடர்ச்சியாக நடந்து கொண் டிருக்கின்றது என்று சுட்டிக் காட்டினான். அதற்கு ஆண்டவர் மறுமொ ழியாக: ஏழுதரமாத்திரமல்ல, எழெழுபதுதரமட்டும் என்று உனக்கு சொல் கின்றேன் என்றார். கருப்பொருளாவது, நீ மன்னிப்பு வழங்குவதைக் குறித்து கணக்கு வைத்திருக்க வேண்டாம். நீ பெற்றுக் கொண்ட மகா பெரிய அளவிடமுடியாத இரக்கத்தில் கொஞ்சத்தை உன் சகோதர னுக்கு காண்பி என்று கூறினார். இன்று சிலர், குற்றம் செய்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலவந்தம் செய்து கொள்வார்கள் அல்லது தங்களுடன் நெருங்கி பழகின்றவர்களுக்கு மற்றவர்கள் மன் னிப்பை வழங்க வேண்டும் என்று அவர்களுக்காக வாதாடுவார்கள். ஆனால், முதலாவதாக, ஒரு விசுவாசியானவன், தன்னுடைய வாழ்க் கையை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். தன்னுடைய குற்றங்களுக்காக மனம் வருந்துகின்றவனாகவும், மனப்பூர்வமாக குற்றம் செய்த வர்களை மன்னிக்கின்றவனாகவும் காணப்பட வேண்டும். இவற்றை எழுதுவதும், பிரசங்கிப்பதும் இழகுவானது, ஆனால் முகஸ்தூதி இல் லாமல் அதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமான உபதேசம். மனித பெலத்தால் ஆகாததை, செய்து முடிப்பதற்கு தேவ ஆவியா னவர் துணையாக இருக்கின்றார். எனவே, உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தைகள் நிறைவேற இடங் கொடுங்கள். இரக்கத்தை பெற்றுக் கொண்ட நீங்கள் அதை மற்றவர்களுக்கும் காண்பியுங்கள். மன்னிப்பை வழங்குங்கள்.
ஜெபம்:
சர்வ வல்லமையுள்ள தேவனே, என் வாழ்விலே, என் பெலத்தா லால் செலுத்தக் கூடாததாயிருந்த பாவ கடனை நீர் செலுத்தி தீர்த்தீர். நானும் உம்மைப் போல மாற எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:12