தியானம் (தை 23, 2025)
உன்னதமானவருடைய பிள்ளைகள்
லூக்கா 6:36
ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோலஇ நீங்களும் இரக்க முள்ளவர்களாயிருங்கள்.
தேவனாகிய கர்த்தர்தாமே, நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நம க்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் நம்மேல் தம்முடைய இரக்கத்தை பொழிந்தார். அந்த இரக்கத்தை நம்மேல் மட்டும் பொழிந்தாரா? 'அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத் தார்.' (யோவான் 1:12). அதாவது, இந்த இரகத்தினால் உண்டாகும் நன் மையை பெற்றுக் கொள்ளுதற்கு, ஆண்டவராகிய இயேசு தாமே ஒரே ஒரு வழியாக இருக்கின்றார். அவரை விசுவாசிப்பதினாலே பெற வேண்டிய ஆக்கினையை பெற்றுக் கொள்ளாமல், பெற்றுக்கொள்வதற்கு தகுதியற்றவர்களாக இருந்த பிதா வாகிய தேவனுடைய பிள்ளைகள் என்ற சிலாக்கியத்தை பெற்றுக் கொண்டோம். அப்படியானால், ஏன் இந்த சிலாக்கியத்தை உணராத வர்களாக இருக்கின்றார்கள்? 'ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவ ர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினை த்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.' இவர்கள் ஆவியிலே எளிமைய ற்றவர்கள், அதாவது தங்கள் ஆவிக்குரிய வறுமையை உணராமல் வாழ் கின்றவர்கள். தங்கள் பாவங்களுக்காக துயரப்படாதபடிக்கு மனக்கடின முள்ளவர்களானார்கள். சத்திய வழியை காண்பிக்கும் தீபத்தை கண் டும், நாம் முற்காலத்திலே வாழ்ந்த வாழ்க்கையை இவர்கள் வாஞ்சித்து நாடுவதால், தங்கள் சொந்த பெலத்திலே வாழ்ந்து விடுவோம் என்ற அகந்தையுள்ளவர்களாக இருக்கின்றார்கள். சுயநீதியே இவர்களுடைய நீதி. இப்படிப்பட்டவர்களை காணும்போது, முதலாவதாக, தேவன் நம் மனக்கண்களை திறந்து விட்டபடியினாலே, அவருக்கு நன்றியை தெரி விக்க வேண்டும். அவர்களை கண்டு எரிச்சலடையாமல், அவர்களுக் காக பரிதவிக்கின்றவர்களாக காணப்பட வேண்டும். அவர்களுடைய மன க்கண்களின் குருட்டாட்டம் நீங்கிவிடும்படிக்கு, அவர்களுக்காக வேண் டுதல் செய்கின்றவர்களாக காணப்பட வேண்டும். நாம் பெற்ற இந்த பெரிதான தேவ நன்மையை, அவர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற இரக்கமுள்ள மனநிலையுடையவர்களாக காணப்படவேண்டும். அப்பொழுது உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே.
ஜெபம்:
பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்ற தேவனே, நான் எப்போதும், உம்முடைய சமுகத்திலே மனத்தாழ்மையோடு இருக்கும்படிக்கு, பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து என்னை வழிநடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவான் 3:16-21