தியானம் (தை 22, 2025)
நம்மேல் வெளிப்பட்ட தேவ இரக்கம்
தீத்து 3:5
தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
இரக்கமானது, நாம் பெற்றுக் கொள்ள பாத்திரராக இருந்த நித்திய தண்டனையை, நாம் பெற்றுக் கொள்ளாதபடிக்கு நம்மைவிட்டு அகற்றிப் போட்டது. 'முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரி யைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.' (எபே சியர் 2:2) 'ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கி றவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்க வர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.' (தீத்து 3:3) நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். அதாவது, நம்முடைய பிறப்பினாலும், நடக்கையினாலும், கிறஸ்துவை அறிய முன்னதாக, 'கீழ்படியாமையின் பிள்ளைகள்;' 'கோபாக்கினையின் பிள்ளைகள்' என்ற பெயர்களுக்கு ஏற்படி வாழ்ந்து வந்தோம். நாம் எதற்கு பாத்திரராக இருந்தோமோ, அதை நாம் பெற்றுக் கொள்ளாதபடிக்கு, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக் கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதி தாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். அதுமட்டுமல்லாமல், தம்முடைய கிருபையினாலே, நாம் பெற்றுக் கொள்ள பாத்திராக இல்லாதிருந்த 'நீதிமான்' 'பரம பிதாவின் பிள்ளைகள்' என்ற மகத்துவமுள்ள பதவியை எங்களுக்கு கொடுத்தார். இந்த மன்னிப்பு எதினால் உண்டானாது? இந்த மாபெரும் தகுதியை பெற்றுக் கொள்வதற்குரிய நிபந்தனை என்ன? தேவ னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பதினாலே மட் டுமே இந்த பதவி நமக்கு கிடைத்தது. எனவே, பிதாவாகிய தேவன் தாமே, இத்தனை இரகத்தை இலவசமாக நம்மேல் பாராட்டியிருக்க, நாம் நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களுக்கு என்ன செய் வது, தேவ நீதி யாக இருக்கும்? தேவனுடைய சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, அவருடைய திட்டம் தன்மேல் நிறைவேற காத்திருக்கின்றவன் என்ன செய்வான்? அவனும் இரக்கம் காண்பிப்பான் அல்லவா?
ஜெபம்:
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல எனக்கு இரங்கின தேவனே, இரக்கத்தை காண்பிக்கும் தெய்வீக சுபாபமானது என்னில் வளரத்தக்கதாக மன்னிக்கும் இருதயத்தை உண்டு பண்ணுவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 103:10