தியானம் (தை 21, 2025)
இரக்கம் உள்ளவர்கள் யார்?
மத்தேயு 5:7
இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியாவனின் வாழ்விலே வசதியிருந்தபோதும், அவன் தன்னிடமுள்ளவைகளிலே நம்பிக்கை வைக்காமலும், தன்னிடமிருக்கும் உலகப் பொருட்களினாலே தன் பிள்ளைகளுக்கு நல்வாழ்வு உண்டாகாது என்றும், ஆண்டவர் இயேசு இல்லாமல் வாழமுடியாது என்றும் மனதார உறுதியாக அறிக்கை செய்கின்றவனாகவும், அவரிலேயே தங்கி வாழ்பவனாகவும் இருந்து வந்தான். அவன் தன் வாழ்விலே சுயநீதியை நடப்பித்தேன் என்று உணர்ந்த கொள் ளும் போது, தன் குற்றங் குறைகளை குறித்து மனம்வருந்துகின்றவ னாவும், தன் சொந்த அறிவின்படியோ, தனக்கிருக்கும் பெலத்தின்படியோ காரியங்களை நடப்பிக்காமல், தேவ நீதி தன் வாழ்விலே நிறைவேற வேண்டும் என்று அதைக் குறித்து வாஞ்சையுள்ளவனாகவும் இருந்தான். ஒருநாள், அந்த ஊரிலே இருந்த மனிதனொருவன், இந்த விசுவாசியின் குடும்பத்திற்கு எதிராக பெரும் குற்றத்தை செய்து, கையும் களவுமாக அகப்படுக் கொண்டான். உலக நீதியின்படியும், மனித நேயங்களின்படியும், அந்த மனிதனாவன், தண்டனைக்கு பாத்திரனாக இருந்தான். அந்த தண்டனையை அந்த மனிதனுக்கு வழங்குவதற்கு, அந்த விசுவாசியானவனுக்கு சகல அதிகார மும், பெலமும் அவனிடம் இருந்தது. அந்தத் தண்டனையை அவனுக்கு வழங்கினாலும், அந்த ஊரின் மக்களும், சக விசுவாசிகளும், அவனுடைய உற்றார் உறவினர் நண்பர்கள் யாருவரும் அதை நீதி என்றே கூறிக் கொள்வார்கள். ஆனால், தேவ நீதி தன் வாழ்விலே நிறைவேற வேண்டும் என்ற வாஞ்சையுடைய அந்த விசுவாசியானவன், தேவனுடைய பாதத்திலே இருந்து ஜெபித்தான். தான் செய்யப் போவதைக் குறித்த பாரம் அவன் மனதிலே உண்டாயிற்று. தன் வாழ்விலே, தனக்கு வரவேண்டியிருந்த நித்திய ஆக்கினையை கர்த்தர் அகற்றிவிட்டார் என்ற உணர்வு அவன் மனதிலே பெருகிற்று. மறுநாள் காலையிலே, நியாயம் செய்யவதற்காக ஊரின் மூப்பர்கள் கூடி, அந்த மனிதனுக்கு வரவேண்டிய கடும் தண்டனையை அறிவித்தார்கள். அந்த வேளை யிலே, அந்த விசுவாசியானவன் எழுந்து நின்று, அவனுக்கு வரவேண்டிய தண்டனை அகற்றிவிட வேண்டும் என்றும், தான் அவன் செய்ய குற்றத்தை மன்னித்து விடுகின்றேன் என்றும் மூப்பர்களுக்கு அறிவித் தான். அந்த விசுவாசியாவன் இரகமுள்ளவனாக இருந்தான். நீங்கள் மற்றவர்கள் வாழ்விலே இரக்கத்தை காண்பிக்கின்றீர்களா?
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, நான் பாத்திரனாக இருந்த என் தண்டனையை நீர் அகற்றிப்போட்டததை உணர்தவனாக, நானும் இரக்கமுள்ளவனாக இருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 145:8-9