தியானம் (தை 20, 2025)
'நீதிமான்கள்'
எசேக்கியேல் 18:32
மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
சோதோம் கொமோரா என்னும் பட்டணங்கள் சாம்பலாக்க படும் முன் னதாக, நீதிமானாகிய ஆபிரகாம், அக்கிரமம் நிறைந்த அந்த பட்டண ங்களுக்காக, கர்த்தரிடத்திலெ அநேக தடவைகள் பரிந்து பேசினான். முடிவிலே, அந்த அந்த பட்டணங்களின் அநீதி எவ்வளவு அகோரமாக இருக்கின்றது என்று அறிந்து கொண்டான். அந்த பட்டணங்களின் அக்கிரமம் மிகுதியினால், தேவனா கிய கர்த்தர் அதை கவிழ்த்துப் போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர் த்தார். அவர்கள் மத்தியிலே லோ த்து என்னும் நீதிமான் வாழ்ந்து வந் தான். அவனோ, அக்கிரமக்காரரு க்குள் வாசமாயிருக்கையில் அவர் களுடைய காமவிகார நடக்கையி னால் வருத்தப்பட்டு. நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்டான். நீதிமானாகிய லோத்தை கர்த்தர் இரட்சித்தார். (2 பேதுரு 2:8). பரம யாத்திரிகளாகிய நாமும் இந்த உலகத்தை கடந்து சென்ற கொண்டிருக்கின்றோம். இந்த உலக த்திலே அநீதியானது மலிந்து கொண்டே போகின்றதை நாம் கேள்வி ப்படுகின்றோம். 'நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான். துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான். அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.' (எசேக்கியல் 18:26-28) என்று தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு கூறியிருக்கி ன்றார். ஒருவேளை நம்மை சுற்றிலும் அக்கிரமங்கள் மலிந்து கொண் டிருக்கலாம். ஒரு விசுவாசியானவன் வாழும் இடத்தில், லோத்தைப் போலவும், நோவாவைப் போலவும், அவன் ஒருவன் மாத்திரம் மீந்திரு ந்தாலும், முதலாவதாக அவன் தேவ நீதியை பற்றிக் கொண்டிருக்க வேண்டும். அநீதிக்கு உடன்படாமல், தேவ நீதி நிறைவேறும்படிக்கு காத்திருக்க வேண்டும். ஒருவரும் கெட்டுப்போகலும், அநீதியிலே அழி ந்து போகாதபடிக்கும் மனம்திரும்ப வேண்டும் என்று, அவர்களுக்காக ஜெபிக்கின்றவர்களாக காணப்பட வேண்டும்.
ஜெபம்:
நீதியிலே பிரியப்படுகின்ற தேவனே, நான் அநீதி செய்கின்ற வர்களோடு சமரசம் செய்யாமல், தேவ நீதியின் வழியிலே நிலைத்தி ருக்கும்படிக்கு உம்முடைய கிருபையினால் என்னை தாங்கி வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 கொரி 6:14