தியானம் (தை 19, 2025)
சாயலால் திருப்தியாவேன்
சங்கீதம் 17:15
நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
நோவாவின் காலத்திலே மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனு ஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந் தது. நோவாவுக்கோ, கர்த்தரு டைய கண்களில் கிருபை கிடை த்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ;டித்த மனுஷ னைப் பூமியின்மேல் வைக்கா மல், மனுஷன் முதற் கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிற வைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மன ஸ்தாபமாயிருக்கிறது என்றார். கர்த்தருடைய பார்வையிலே நீதிமானாக இருந்த நோவாவோ, ஜனங்களின் அக்கிரமங்களை அறிந்தவனாக இரு ந்தும், நீதியை பிரசங்கித்தவனாக இருந்தான். ஏனெனில் தேவ நீதி யைக் குறித்த பசிதாகம் அவனிடத்தில் இருந்தது. நீதியின் கிரீடத்தை பெற்றுக் கொள்ளும்படி அழைக்கப்பட்ட தேவ பிள்ளைகளே, கோண லும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்ற வர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருந்து, முதலாவதாக, உங்களுடைய சொந்த வாழ்விலே தேவ நீதியை நடப்பிக்க வேண்டும். அத்துடன், அநீதியை நடப்பிக்கும் சந்ததியினரின் வாழ்வைக் குறித்து, எரி ச்சலடையாமல், அவர்களுக்காக பரிதபிக்கின்றவர்களாகவும், கிடைக்கும் சந்தர்ப்பங்களிலே, தேவ நீதியை குறித்தும், அநீதியாக வாழும் வாழ்க் கையின் முடிவு எப்படியாக இருக்கும் என்பதைக் குறித்தும், அதிலிரு ந்து எப்படி தப்பித்தக் கொள்வது எப்படி என்பதையும் போதிக்கின்ற வர்களாகவும் காணப்பட வேண்டும். நோவாவின் நாட்களிலே, அக்கிரம செய்கைக்காரர்கள் ஒருவரும் மனந்திரும்ப மனதில்லமல் அழிந்து போனா ர்கள். அது தேவனாகிய கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு. அதுபோல தேவ நீதியானது, நம்முடைய வாழ்விலும், அக்கிரம செய்கைகாரருடைய வாழ்விலும் நிச்சயமாக நிறைவேறும், தேவ நீதியைக் குறித்து பசிதாகமுடையோர், தேவனுடைய நீதியினால் திருப்தியடை வார்கள். ஆனால், தேவ பிள்ளைகளுடைய மனநிலையோ, தேவனுக்கு முன்பாக ஏற்புடையதாக இருக்க வேண்டும். தேவனுக்கு பிரியமான வர்கள். நீதீயில் அவருடைய முகத்தைத் தரிசிப்பார்கள். அவர்கள் விழி க்கும்போது அவருடைய சாயலால் திருப்தியாவார்கள்.
ஜெபம்:
மகா வறட்சியான காலங்களில் என் ஆத்துமாவைத் திருப்தியாக்கி நடத்தும் தேவனே, நான் எப்போதும் உம்முடைய நீதி நிறைவேற வேண்டும் என்ற எண்ணமுடையவனாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 63:1