புதிய நாளுக்குள்..

தியானம் (தை 18, 2025)

தெய்வீக சுபாவங்களுக்கு பங்காளிகள்

மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப் பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த அதிகாரியானவன், தன்னை நியமித்த தேசத்தின் ராஜாவிற்கு விசுவாசமற்றவனும், தன் ஊராருக்கு அநியாயம் செய்கின்றவனுமாக இருந்தான். அந்த ஊரின் வருடாந்த ஒன்று கூடலின் நாளிலே, ராஜாவின் பிரதிநிதிகள் அந்த கொண்டாட்டத்திலே கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அந்த ஒன்றுகூடலிலே அந்த அதிகாரியா னவன் உரையாற்றும் போது, நீதியும், நியாயமும் ஆளுகைக்கு இன்றியமையாதது என்று திட்டமாக கூறினான். அந்த ஊர் ஜனங்கள் மத்தியில், நீங்கள் ஒருவராக அந்த இடத்திலே இருந்தால், அந்த அதி காரியைக் குறித்து என்ன கூறு வீர்கள். ஒருவன், தன் ஆவிக்குரிய வாழ்வின் பரிதாப நிலைமை உண ராமல், நீதியையும் நியாயத்தையும் பற்றி பிரசங்கித்தால், அவன் மாய க்காரனாக இருக்கின்றான் என்று கூறுவீர்கள் அல்லவா? தன் குற்ற ங்களை குறித்து மனம்வருந்தாதவன், எப்படி தேவ சித்தம் தன் வாழ்வில் நிறைவேறும்படிக்கு தன்னை ஒப் புக் கொடுத்து காத்திருப்பான்? தன் சுயபெலத்தில்; தங்கியிருப்பவன், சுயநம்பிக்கையில் வாழ்பவன், எப்படி தேவ நீதியைக் குறித்து வாஞ் சையுள்ளவனாக இருப்பான்? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு விசுவா சியானவனின் வாழ்வில் இந்தப் படிகள் நிறைவேறுவதற்கு அவன் ஆண் டாண்டு காலமாக காத்திருக்க வேண்டும் அல்லது பயிற்சி எடுத்து சித்தி பெற வேண்டும. என்ற எண்ணம் தவறானது. இவைகள் ஒரு விசுவாசியானவனின் தகமைகள் அல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக இரட்சிப்பை அடைந்து, தேவ வார்த்தைக்கு கீழ்படி கின்ற சுபாவங்கள் இருக்கும். மாம்ச சிந்தையோ இதற்கு விரோதமாக செயற்படும். ஒரு விசுவாசியின்; வாழ்விலே இவைகள் காணப்படாமல் இருந்தால், அவன் தன் ஆவிக்குரிய வறட்சி நிலைமைய ஆராய்ந்து உணர்ந்த வனாய் மறுபடியும் சிலுவையண்டைக்கு திரும்ப வேண்டும். தேவ பயமுள்ள விசுவாசியின் வாழ்விலே இந்தப்படிக்கள் தொடர்ச்சி யாக நடைபெற வேண்டும். ஒரு விசுவாசியானவன், தன் வாழ்விலே, முதலாவதாக தேவ ராஜ்யத்தையும் அதன் நீதியையும் தேட வேண்டும். அந்த நீதியைக் குறித்து பசிதாகமுள்ளவன், மறுமையிலே நித்திய திருப்தியை அடைவது மட்டுமல்ல, இந்த உலகத்திலும், அவன் எல்லா சூழ்நிலைகளிலும் கிறிஸ்துவுக்ள் திருப்தியடைகின்றவனாக இருப்பான்.

ஜெபம்:

நீதியின் தேவனே, கர்த்தருடைய பிரசன்னமாகுதலை வாஞ்சிக்கும் யாவருக்கும் நீதியின் கீரிடத்தை கொடுப்பவரே. நான் தேவ நீதியை வாஞ்சித்து தேடுகின்றவனாக இருக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 தீமோ 4:8