புதிய நாளுக்குள்..

தியானம் (தை 17, 2025)

தேவ நீதியைக் குறித்த வாஞ்சை

மத்தேயு 5:6

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.


ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்ன ப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான். ஆயக்காரர், ரோமருக்கு வரிவசூலிப் பவர்களாக இருந்ததால், யூதர்கள், இவர்களை துரோகிகள் என்று கரு தினார்கள். அத்தோடு, இவர்கள் தங்களுக்கு ஆதாயம் உண்டாகத்த க்கதாக அநீதியான முறையில், ஜன ங்களிடம் வரியை வாங்குகின்றவர்க ளாவும் இருந்தார்கள். ஒரு நாள், ஆண் டவராகிய இயேசு எரிகோவில் பிர வேசித்து, அதின் வழியாக நடந்து போகையில், இயேசு எப்படிப்பட் டவரோ என்று அவரைப் பார்க்கும்படி சகேயு வகைதேடினான். அவன் குள் ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன் றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான். அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள். சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக் கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினது ண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். ஐசுவரியவானும், அநீதி செய்கின்றவனும், பாவியும், துரோகியுமாக இருந்த அவனுடைய செய்கைகள், முதலாவதாக, அவன் தன் ஆவிக் குரிய ஏழ்மையை உணர்ந்ததை வெளிக்காட்டுகின்றது. அதனால், அவன் ஆண்டவர் இயேசுவை தேடினான். தன் வாழ்வின் பரிதாபநி லை யை குறித்து, அவன் தன் மனதிலே உணர்ந்து கொண்டபடியால், மனந் திரும்புதல் அவன் வாழ்க்கையிலே உண்டானது. தேவ சித்தமானது, தேவ திட்;டத்தின்படி தன்னில் நிறைவேறும்படிக்கு, தன்னை ஒப்புக் கொடுக்க ஆயத்தமுள்ளவனான். இப்பொழுது அவன் தன்னிலே தேவ நீதியானது நிறைவேற வேண்டும் என்று எண்ணமுள்ளவனான்;. அதன் முதற்படியாக, தன்னிடத்திலிருக்கும் அநியாயங்களெல்லாம் அகற்றப்பட வேண்டும் என்ற வாஞ்சை அவன் மனதிலே உண்டாயிற்று. அப்படிப்பபட்ட பசிதாகம் உள்ளவர்கள், மனத்திருப்தியை பெற்றுக் கொள்கின்றார்கள்.

ஜெபம்:

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும் உம்முடைய திருக்கு மாரனாகிய இயேசுவை அனுப்பிய பிதாவாகிய தேவனேஇ என் வாழ்விலே இருக்கும் அநியாயங்களை நான் அகற்றிவிட உணர்வுள்ள இருயதத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 2:6-8