புதிய நாளுக்குள்..

தியானம் (தை 16, 2025)

'நான் இதை செய்து முடிப்பேன்'

யோவான் 21:17

பேதுரு துக்கப்பட்டு: ஆண்ட வரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான்.


ஆண்டவராகிய இயேசுவின் பிரதான அப்போஸ்தலனென்று அழைக்கப்பட்ட பேதுரு என்பவன், தன் மனதிலுள்ள காரியங்களை பேசுவதற்கு முந்திக் கொள்பவனாக இருந்து வந்தான். சில இடங்களிலே ஆண்டவர் இயேசுவை கூட கடிந்து கொண்டான். ஒரு சமயம், ஆண்டவராகிய இயேசு தம்முடைய பாடுகளையும் மரண த்தையும் குறித்து முன்னறிவித் தபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டு போய்: ஆண்டவரே, இது உம க்கு நேரிடக்கூடாதே, இது உம க்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொ டங்கினான். ஆண்டவர் இயேசு வோ, திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத் தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; என்று அவனைக் கடிந்து கொண் டார். இன்னுமாய், ஆண்டவர் இயேசு சீஷர்களின் கால்களை கழுவின போது, தன் கால்களை கழுவக்கூடாது என்று தடுத்து நிறுத்தினான். மேலும், ஆண்டவர் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, தம் முடைய சீஷர்களை நோக்கி: இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள் என்று கூறியபோது, அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான். இப்படியாக தன்னை குறித்தும், தன் பலத்தைக்குறித்தும் பேதுரு எண்ணங் கொண்டிருந்தான். இவன் ஆண்டவரை நேசிக்கின்றவ னும், அவராலே தெரிந்து கொள்ளப்ப்டவனுமாயிருந்தான். ஆண்டவரோடு சேர்ந்து ஊழியங்களை செய்து வந்தான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நி லையிலே அவன் தன் ஆண்டவரை மறுதலித்த போது, தன் ஆவிக்கு ரிய நிலைமையையும், தன் பெலத்தால் ஒன்றும் ஆகாது என்பதை உணர்ந்து ஆவியிலே எளிமையுள்ளவனான். தன் பெலவீனத்தையும், குற்றத்தையும் உணர்ந்து, துயரப்பட்டு, மனங்கசந்து அழுதான். ஆண் டவர் உயிர்தெழுந்தபின்பு, அவனை தேற்றி, தையரியப்படுத்தி, ஆறு தல் அளித்தார். தேவ சித்தமானது, தேவ திட்;டத்தின்படி தன்னில் நிறை வேறும்படிக்கு, சாந்தகுணமுள்ளவனான். கருப்பொருளாவது, நாம் இந் தப் படிகளை ஒருமுறை கடந்து வந்ததுடன், அது முடிவடைவ தில்லை. நாம் மறுபடியும், எப்போதெல்லாம், பேதுருவைப் போல நாம் நம்பெல த்தைக் குறித்து மேன்மைப் படுத்துகின்றோமோ, அப்போதெல்லாம் சிலுவையின் அடியில் சென்று மனமுடைந்து, மனம்திரும்பி, மறுபடியும் நம்மை ஒப்புக்ககொடுத்து பெலனடைய வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, என் சுயத்தை குறித்து ஒருபோதும் மேன்மைபாராட்டாதபடிக்கும், என்னில் குறைகளை காணும்போது, உம் சமுகத்தில் வந்த மனந்திரும்புகின்ற இருதயத்தை எனக்கு தந்து வழிநட த்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சகரியா 4:6