புதிய நாளுக்குள்..

தியானம் (தை 14, 2025)

சாந்தகுணத்தை காண்பியுங்கள்

எண்ணாகமம் 12:3

மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.


மோசேயானவன், தேவ கற்பனைகளை பெற்றுக் கொள்ளும்படி, சீனாய் மலையில் ஏறிச் சென்றபோது, ஜனங்களோ சீக்கிரமாக தேவனுடைய வழியைவிட்டு விலகி, தங்களுக்கென்று விக்கிரகங்களை ஏற்படுத்தி, அதைப் தங்கள் தெய்வம் என்று பணிந்து கொண்டு, புசிக்கவும், குடிக்கவும், அலங்கோலங்களை நடப்பித்து தங்களைக் கெடுத்துக் கொண் டார்கள். அப்பொழுது தேவகோபம் பற்றியெரிந்தது. அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்து, ஜனங்களுக்காக பரிந்து பேசினான். அவர்களை நிர்மூலமாக் கா மல், பரிதாபப்;படும்படி தேவனை வேண்டிக் கொண்டான். அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். சாந்தகுணமுள்ள மோசேயானவன், மலையிலிருந்து இறங்கி, பாள யத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் ஜனங்க ளின் நடன த்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத் துப்போட்டு. அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான். ஜனங்களின் தலைவர்களை மிகவும் கண்டித்து பேசினான். அவன் பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவ ர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள். அந்நாளிலே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள். பிரியமாவர்களே, சாந்த குணம் என்றால் என்னவென்று கடந்த சில நாட்களாக தியானித்து வரு கின்றோம். குற்றங்களை கண்டித்து, ஒழுக்கநெறிகளை சபையிலே பேணுவது அவசியமானது. குற்றம் செய்தவர்கள் அதை உணர்ந்த தேவ சமுகத்திலே தங்களை ஒப்புக் கொடுத்து சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். அப்பொழுது, ஆவியிலே எளிமையுள்ளவகள், இயேசுவின் தங்கி வாழ்வதால், தங்கள் குறைகளுக்காக துயர ப்பட்டு, மனந்திம்புவார்கள். ஒருவேளை அநீதியிளைகப்பட்டிருந்தால், சாந்த குணமள்ளவர்கள் தேவனுடைய சித்தம் நிறைவேறும்படி தங்களை ஒப்புக் கொடுப்பார்கள். எனவே, சாந்தகுணமுள்ளவர்களே, தேவநீதி நிறைவேற காத்திருங்கள். சாந்த குணமுள்ளவர்களாக, பெவீனமுள்ளவர்களுக்காக கர்த்தரிடத்தில் பரிந்து பேசி ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, நான் எப்போதும் சாந்த குணத்தை கனியை மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்றவனாக மாத்திரம் இருக்காமல், மற்றவர்களுக்கு காண்பிக்கின்றவனாகவும் இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 32:30-34