புதிய நாளுக்குள்..

தியானம் (தை 12, 2025)

சாந்தகுணமுள்ள ராஜாதி ராஜா

மத்தேயு 11:29

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்;


மனிதகுலத்தின் மெசியா 'இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக் கொ ண்டு' எருசமேலுக்கு வருகை தந்தார். இன்றைய உலகிலே சில மனி தர்கள் தலைவர்களாகும்படிக்கு தங்களை தாழ்மையுள்ளவர்கள் என்று காண்பித்து, பாமர குடிமக்களோடு, சில மணிநேரத்தை, அவர்கள் வேலை செய்யும் இடத்திலோ, அவர்கள் வீட்டிலோ செலவழித்து விட்டு, அதை விளம்பரப்படுத்துகி ன்றார்கள். ஆண்ட வராகிய இயேசுதாமே, கழுதையில் ஏறி வந்ததால் அவர் தாழ்மையானவராக இருந்தார் என்பது பொருளல்ல. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த் தினார். (பிலி 2:6-8). அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே, இயேசுவோ டிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக் கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய் வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.' (மத்தேயு 26:51-54). சர்வ வல்லமையுள்ள ஆண்டவரரிகய இயேசு, என் சித்தப்படியல்ல, உம்முடைய சித்தப்படி எனக்கு ஆகட்டும் என்று, பிதாவின் சித்ததிற்கு தன்னை ஒப்புக் கொடுத்து, மரிக்கும் தறுவாயிலும், இவர்கள் அறி யாமல் செய்கின்றார்கள் இவர்களை மன்னியும் என்று தன்னை துன்புறுத்தும் கொலை பாதகர்களுக்காகவும் வேண்டிக் கொண்டார். பிரிய மானவர்களே, சாந்தகுணம் இன்னது என்பதை நம்மடைய ஆண்ட வராகிய இயேசுவினிடத்திலே கற்றுக் கொள்ளுங்கள். அந்த தெய்வீக சுபாவத்திலே மனத்தாழ்மையும், கீழ்ப்படிவும் இன்றியமையாதது. சுய பெலத்திற்கும், சுயத்தின் ஆளுகைக்கும் அங்கே இடமில்லை. தேவ சித்தம் நிறைவேறுவதே அதின் கனியாக வெளிப்படும்.

ஜெபம்:

பரலோக தந்தையே, என் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்படி, இயேசு கிறிஸ்துவின் நுகத்தை என் மேல் ஏற்றுக்கொண்டு, அவரிடத்தில் கற்றுக்கொள்ளும்படி, சத்திய ஆவியினாலே என்னை வழி நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சகரியா 9:9