புதிய நாளுக்குள்..

தியானம் (தை 10, 2025)

எச்சரிப்பின் தொனி

யோவேல் 2:12

ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


காலத்திற்கு காலம், தேவனாகிய கர்த்தரால்; தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள், தேவனுடைய வார்த்தையை மீறி, பாவம் செய்து வந் தார்கள். அவர்களுடைய மீறுதல்களைக் குறித்து எச்சரிப்பின் வார்த் தைகள் அறிவிக்கப்பட்ட போது, அவர்கள் அதைக் கேளாமல், அசட்டை செய்து, தங்கள் இருதயங்களை கடினப்படுத்திக் கொண்டு, தேவனு டைய எச்சரிப்பின் வார்த்தைகளை கூறுகின்றவர்களை, அடித்து, துன் புறுத்தி, பலரை கொலை செய்தா ர்கள். அதனால், அவர்கள் அந்நிய ஜாதிகளால் சிறைப்பிடி க்கப்பட்டு போனார்கள். சிறையிருப்பின் துன் பங்களாலும், ஆளோட்டிகளாலும் நெருக்கப்படுகின்ற வேளையிலே, தங்கள் அவல நிலையையும், தங் கள் முன்னோர்கள் செய்த பாவ ங்களை நினைத்து, மனம்வருந்தி, அழுதார்கள். தங்கள் கொடூரமான இருதயத்தை நினைத்து புலம்பி னார்கள். அந்த வேளையிலே, அவ ர்கள் வாழ்க்கையிலே பெரிதான விடுதலை உண்டாயிற்று. கிருபையின் காலத்திலே வாழும் தேவ பிள்ளைகளே, தேவ கிருபை என்றுமுள்ளது என்று கூறிக் கொண்டு, உணர்வற்ற வாழ்க்கை வாழாதாடிக்கு எச்சரி க்கையுள்ள வர்களாக இருங்கள். நம்முடைய வாழ்க்கையின் கிரியை களினாலே பிதாவாகிய தேவனுடைய நாமம் மகிமைப்பட வேண்டும். 'கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின் னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பி னது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.' (2 பேதுரு 2:20-22) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே, கர்த்தரை அறிந்த பின்பு, இந்த உலகத்தின் சுகபோகங்களுக்காக மறுபடியும் அடிமைப்படாமல், கர்த்தரிடத்திலே சேருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தத்திற்கென்று என்னை அழைத்த தேவனே, என்னால் ஜெயங்கொள்ள முடியாதவைகளை ஜெயம் கொள்ளும்படி நீர் என்மேல் பொழிகின்ற கிருபையை வீணடிக்காமல் வாழ உணர்வுள்ள் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 26:12