தியானம் (தை 09, 2025)
எதற்காக புலம்புகின்றீர்கள்?
சங்கீதம் 51:17
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
மனித குலத்தின் மீட்பராகிய இயேசுவை, சிலுவையில் அறையும்படிக்கு, கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு போர்ச்சேவகர் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: 'எருசலேமின் குமாரத்தி களே, நீங்கள் எனக்காக அழா மல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப் பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள்வரும். அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத் துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள்' என்றார். ஆம் பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசுதாமே, மனித குலத்தின் பாவங்களுக்காக தன்னையே தான் பலியாக ஒப்புக் கொடு த்தார். நம்மேல் வரவிருந்த ஆக்கினையை தம்மேல் ஏற்றுக் கொண் டார். மனிதகுலமானது, அவருக்காக புலம்பி, அழுது, துயரப்படாமல், அவரை சிலுவையில் அறைந்த அவர்களுடையதும், அவர்கள் சந்ததி யினர்மேல் இனி வரவிருக்கும் ஆக்கினை நீங்கும்படியாகவும், புலம்பி அழ வேண்டும். மரண வீடுகளிலே வந்து புலம்பி அழும்படி, கூலிக்கு அமர்த்தப்பட்;டவர்கள்போல கருத்தற்ற விதமாக அல்ல, அவரவர் தங்கள் தங்கள் பரிதாப நிலைமையை உணர்ந்தவர்களாக, தங்கள் பாவங்க ளுக்காக துயரப்பட வேண்டும். நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை காண்கின்ற தேவன், அதைப் புறக்கணியாமல், தம்மு டைய இரக்கத்தை அவர்கள்மேல் ஊற்றுகின்றவராக இருக்கின்றார். நம்முடைய வாழ்க்கையிலும், தேவன் பாவங்களை மன்னிப்பார், தேவ கிருபை என்றுமுள்ளது என்று கூறி, வாழ்வில் இருக்கும் மீறுதல்களை பாராமுகமாக விட்டு விடாமல், நாம் நமக்காகவும், நம் சந்ததிக்காகவும், உணர்வுள்ள இருயத்தோடும், கருத்தோடும் தேவனை நோக்கி வேண் டுதல் செய்கின்ற வர்களாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
காருண்யமான தேவனாகிய கர்த்தாவே, நான் உம்முடைய கிருபையை வீணாக்கி, கூலிக்காக மாரடிக்கின்றவனைப் போல வாழாத படிக்கு, நன்றி உணர்வுள்ள இருதயத்தோடு, வாழ வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - யோவேல் 2:12