புதிய நாளுக்குள்..

தியானம் (தை 08, 2025)

சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல்

2 கொரிந்தியர் 7:6

ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.


அநேக உபத்திரவங்கள், பாடுகள் மத்தியிலும், கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை அறிவித்து வந்த தேவ ஊழியராகிய பவுல், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன் என்று கூறினார். எப்படியென்றால், அவர்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, அவர்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திர வப்பட்டார்கள். புறம்பே போராட் டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. அந்த வேளையிலே கொரிந்து பட்டணதிலிருந்து, தீத்து என்னும் ஊழியர் வழியாக பவுலும் அவரோடிந்தவர்களும் தங்கள் பிரயாசத்தின் பலனை கேள் விப்பட்ட போது, ஆறுதல் அடைந்தார்கள். அந்தப் பலன் என்ன? அப்போஸ்தலராகிய பவுல், நிரூபத்தினூடாக, கொரிந்து பட்டணத்திலிருந்தவர்கள் மத்தியிலே இருந்த குறைகளை சுட்டிக்காட்டி, அவர்களை கடிந்து கொண்டார். அவர்கள் அழிந்து போகும்படியாக அல்ல, அவர்கள் மனந்திரும்ப வேண்டும் என்ற அன்பினாலே அவர்கள் குற்றங்களை தெளிவாக கூறினார். அத னாலே, கொரிந்து சபையிலே இருந்தவர்களின் மனதிலே துக்கம் உண்டாயிற்று. அந்த துக்கம் மனந்திரும்புதலுக்கு ஏதுவாக துக்கமாக இருந்தது. அதைக் குறித்து பவுல் அவர்களுக்கு கூறியதாவது: 'ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை. இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற் காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்தி ரும்புதலை உண்டாக்குகிறது. லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.' எனவே, பரலோகத்திலே உண்டாகும் நித்திய இளைபாறுதல் மட்டுமல்ல, இந்த உலகத்திலேயும், நம்முடைய உபத்திரவங்கள் மத்தியிலே, பிரயாசத்தின் பலன்களை காணும்போது, பிரயாசப்பட்டவர்க ளும், கண்டிததை நல்மனதோடு ஏற்றுக் கொண்டவர்களும் தேவனாலே உண்டாகும் ஆறுதலை அடைகின்றார்கள்.

ஜெபம்:

சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் தேவனே, தன்னைத் தாழ்த்தி உம்மிடத்தில் சேருகின்ற யாவருக்கும் உம்முடைய வார்த்தை வழியாக நீர் கொடுக்கும் ஆறுதலுக்காக நன்றி செலுத்துகின்றேன். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:18